முதுகு வலிக்கு `குட் பை` சொல்ல இந்த 5 வழிகளை பின்பற்றுங்கள்!
Remedies For Back Pain: அடிக்கடி ஏற்படும் முதுகு வலியை தடுக்க உங்கள் வாழ்வியல் சார்ந்த இந்த 5 மாற்றங்களைச் கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும்.
Remedies For Back Pain: முதுகு வலி அல்லது அதுசார்ந்த பிரச்னைகள் என்பது உலகெங்கிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. சமையலறையில் வேலை செய்யும் போதோ, வீட்டு வேலைகளைச் செய்யும்போதோ, மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதோ, நம் வாழ்வில் அடிக்கடி கடுமையான முதுகுவலியை அனுபவித்திருக்கிறோம்.
எப்படி இருந்தாலும், நாம் அடிக்கடி முதுகு வலியை அனுபவிக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்தால், முதுகுவலி என்பது காலப்போக்கில் உருவாகும் பல மோசமான பழக்கவழக்கங்களின் விளைவாகும் என்பதை புரிந்துகொள்ள முடியும். பிசியோதெரப்பி மருத்துவர்களை சந்திக்க முன்பதிவு செய்வதற்கு முன், அடிக்கடி ஏற்படும் முதுகுவலியைத் தடுக்க உங்கள் வாழ்வியல் சார்ந்த இந்த 5 மாற்றங்களைச் கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும்.
1) சுறுசுறுப்பான வாழ்க்கையை நடத்துதல்
நீங்கள் தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பாவிட்டாலும், உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க யோகாசனங்கள் அல்லது சில எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். உடற்பயிற்சி மற்றும் குடிநீர் ஆகியவை சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வழிநடத்துவதற்கு முக்கியமான இரண்டு முறைகளாகும். உடற்பயிற்சியானது நாட்பட்ட நோய்களை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது. உங்கள் மனநிலையை சீராக்கும். மேலும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உங்களுக்கு உதவுவதுடன் அதிக ஆற்றலையும் அளிக்கிறது. மாறாக, தண்ணீர் குடிப்பது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது, செரிமானத்தை ஆதரிக்கிறது மற்றும் உடலின் மாசுகளை நீக்குகிறது.
மேலும் படிக்க | நீரிழிவு முதல் கீல்வாதம் வரை... முருங்கை இலை கஷாயம் செய்யும் மாயங்கள்!
2) வேலை செய்யும் போது சரியான போஷிஷனில் அமரவும்
நீண்ட நேரம் மேசையில் லேப்டாப்பை வைத்து பயன்படுத்தும்போது, முதுகு வலி மிகவும் கடுமையானதாகிவிடும். கணினியில் பணிபுரியும் போது உங்கள் கன்னத்தை மேலே சாய்ப்பதைத் தவிர்க்க, திரையை கண் மட்டத்தில் வைக்க வேண்டும். மடிக்கணினியைப் பயன்படுத்தும் போது, அதை கண் மட்டத்திற்கு உயர்த்தி, வெளிப்புற கீ-போர்ட் மற்றும் மவுஸை வைக்கவும், இதனால் உங்கள் முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் சீராக இருக்கும்.
3) உங்கள் சுமையை சமநிலைப்படுத்துங்கள்
ஒரு பை அல்லது கைப்பையை எடுத்துச் செல்லும்போது உங்கள் உடல் எடையில் 10% க்கு மேல் சுமக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கனமான பொருட்களை நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தால், அவற்றை உங்கள் பையின் அடிப்பகுதியில் வைக்கவும், மேலும் நாள் முழுவதும் உங்கள் பையை உங்கள் தோள்களுக்கு இடையில் முன்னும் பின்னுமாக மாற்றவும்.
4) முடிந்தவரை சாய்வதைத் தவிர்க்கவும்
உங்கள் முதுகில் தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்க்க, உங்கள் தோள்களை தளர்வாகவும், உங்கள் காதுகளை உங்கள் இடுப்புக்கு ஏற்பவும் நிற்பது முக்கியம். மோசமான போஷிஷனில் உட்கார்வது உடற்பயிற்சி செய்வதற்கான உங்கள் திறனை மட்டுப்படுத்தலாம் மற்றும் முதுகு அசௌகரியம், குறைந்த நெகிழ்வுத்தன்மை, முதுகெலும்பு வட்டு பிரச்சினைகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் ஆகியவற்றின் மூலம் உட்கார்ந்த வாழ்க்கை முறையையே ஊக்குவிக்கும்.
5) நல்ல மெத்தையை பயன்படுத்துங்கள்
மோசமான மெத்தையில் தூங்குவது பொதுவாக முதுகுவலிக்கு முக்கிய பங்களிப்பாகும், இது பெரும்பாலும் தவறான முதுகெலும்பு சீரமைப்பு மற்றும் சமமற்ற உடல் எடையினால் ஏற்படும் விளைவாகும். முதுகுவலிக்கு நல்ல மெத்தையைத் தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்றாகும். ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்தை உறுதி செய்வதற்கும், முதுகுவலி பிரச்சனைகளைத் தடுப்பதற்கும் உயர்தர மெத்தையில் பணத்தை செலவழிப்பது மிகவும் முக்கியம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ