கொரோனா பாதிப்பு தான் இன்று உலக அளவில் மக்களுக்கு மிகப்பெரிய சுகாதார சவாலாக எழுந்துள்ளது. மக்களின் சுகாதாரத்திற்கு எழுந்திருக்கும் இந்த சவாலானது உலகையே ஆட்டம் காணச் செய்து இயல்பு வாழ்க்கையை முடக்கிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவை நமக்கு பொது உபயோகத்திற்கு வருவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்.  
பொதுவாக நுரையீரலில் தாக்கத்தை உண்டாக்கும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு செயற்கை சுவாசக் கருவிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. 


அதாவது ஆக்சிஜன் தேவை அதிகம். இயற்கையாகவே நமது உடலின் ஆக்சிஜனை அதிகரிப்பது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வது கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பயனளிப்பதாக இருக்கும்.


Also Read | முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு தரும் இஞ்சி... எப்படி பயன்படுத்துவது?


உடலில் ஆக்சிஜன் அளவு 98- 100 க்குள் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆக்சிஜன் அளவானது 43 க்கு கீழே சென்றுவிட்டால், Oxygen சிலிண்டர் உதவி அவசியம். உயிர் காற்றான ஆக்சிஜன் குறைபாட்டை நிவர்த்தி செய்யாவிட்டால் உயிர் பிரியும் வாய்ப்பு உள்ளது.
எனவே நமது உணவு முறையில் ஆக்சிஜன் அதிகம் உள்ள பொருட்களை நாம் அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நலன் பயப்பதாக இருக்கும்.


இது கொரோனாவுக்கு மட்டுமல்ல, ஆஸ்துமா உட்பட சுவாசப் பிரச்சனை இருப்பவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். ORAC-Oxygen Radical Absorption Capacity என்ற கணக்கீடு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி பல்வேறு உணவு பொருட்கள் பரிசோதிக்கப்பட்டன. இந்த உணவுகளை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் சுவாசப் பிரச்சனைகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.


குறிப்பாக சில பொருட்களின் பட்டியலை இங்கு கொடுக்கிறோம். மில்லி கிராம், கிராம் என்பது போன்று ORAC என்ற அளவில் பொருட்களில் உள்ள ஆக்சிஜன் அளவு குறிக்கப்படுகிறது...


100 கிராம் கத்தரிக்காயில்14,582 ORAC உள்ளது. ஒரு ஆப்பிளில் 5,900 ORAC உள்ளது என்றால், 00 கிராம் மாதுளையில் 2,860 ORAC உள்ளது.


ஏறக்குறைய அனைத்து காய்கறிகளிலும், வழக்கமான கொதிநிலையில் சமைக்கப்படும்போது அவற்றின் ORAC மதிப்பு 90% வரை குறைந்துவிடும். ஆனால்  நீராவியில் காய்கறிகளை சமைத்தால், அது இந்த மதிப்பை அதிக அளவில் தக்க வைத்துக் கொள்ளும்.


இப்போது புரிகிறதா ஏன் நீராவியில் சமைக்கப்படும் பண்டங்கள் ஆரோக்கியமானவை என்று?   


100 கிராம் கிராம்பில்  314446 ORAC உள்ளது. பட்டை 50 கிராமில்  267537 ORAC இருக்கிறது.  100 கிராம் மஞ்சளில் 102700 ORAC உள்ளது.  100 கிராம் சீரகத்தில் 76800 ORA உள்ளது. ஒரு கப் துளசியில் 67553 ORAC உள்ளது என்றால், 100 கிராம் இஞ்சியில் 28811 ORAC உள்ளது என்று தோராயமாக கூறலாம்.  இதுபோன்ற உணவுப் பொருட்களை சரியான அளவில் பயன்படுத்தினால் ஆக்சிஜன் அபரிதமாக கிடைக்கும், ஆரோக்கியமாக வாழலாம். 


வைத்தியனுக்கு கொடுப்பதை விட வணிகனுக்கு கொடு என்று பழமொழி ஒன்று உண்டு தானே!!!  அதேபோல், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்....