50 வயது ஆகிவிட்டதா? இந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்!
புரோட்டீன் சத்து நமது உடலுக்கு சிறந்த எனர்ஜியையும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் செய்கிறது. வயதான பின்பு நமக்கு புரோட்டீனின் தேவை அதிகரிக்கிறது.
ஒருவரது உணவுபழக்கம் தான் அவரது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது, எந்த வயதினராக இருந்தாலும் சரி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினசரி அவர்களது உணவில் போதுமான அளவு புரதம் இடம்பெற வேண்டும். தினசரி உணவில் நாம் புரோட்டீன் சேர்த்துக்கொள்வதால் வயிறு நிரம்பியது போன்ற உணர்வும், நமது தசை ஆரோக்கியத்திற்கும், ரத்த அழுத்தத்தை சமன் செய்வதற்கும் உதவுகிறது. அதுமட்டுமள்ளாது புரோட்டீன் சத்து நமது உடலுக்கு சிறந்த எனர்ஜியையும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் செய்கிறது. வயதான பின்பு நமக்கு புரோட்டீனின் தேவை அதிகரிக்கிறது, அதனால் தினசரி உணவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்வது அவசியமானது.
பால் சம்மந்தப்பட்ட உணவு வகைகளில் புரோட்டீன் சத்து அதிகமாக கிடைக்கிறது, அதேசமயம் பால் ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் ஒவ்வாமை போன்றவை இருக்கும்பட்சத்தில் பால் பொருட்களை நீங்கள் தவிர்க்கலாம். இதுபோன்ற ஒவ்வாமைகள் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் 50 வயதிற்கு மேல் ஆகும்போது நீங்கள் பால் பொருட்களை சாப்பிட்டு அதிகளவு புரோட்டீன் மற்றும் வைட்டமின்களை பெறலாம். பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்றவை புரத சத்து தருவதோடு எலும்புகளுக்கும் வலுவை தருகிறது. குயினோவா என்கிற தானியத்தில் அதிகளவில் புரத சத்து நிரம்பியுள்ளது, இதில் உடலுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் நிரம்பியுள்ளது. மேலும் இதிலுள்ள நார்சத்து கொழுப்புகளை குறைக்க உதவுகிறது, அதனால் வயதானவர்கள் இதனை தைரியமாக சாப்பிடலாம்.
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
மாட்டிறைச்சியில் இரும்புசத்து, வைட்டமின் பி-12, செலினியம் மற்றும் உயர்தர புரதம் போன்ற 10 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, இதனை நீங்கள் குறைந்த அளவு உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு புரத சத்து கிடைக்கிறது. புரத சத்திற்கு நல்ல ஆதாரமாக முட்டை விளங்குகிறது, ஒரு முட்டையில் 6-7 கிராம் புரதம், இரும்புச் சத்து, வைட்டமின்கள் பி-12 மற்றும் டி மற்றும் கோலின் போன்ற சத்துக்கள் உள்ளன. எடையை குறைக்க விரும்புபவர்கள் மற்றும் எடையை மெயின்டெய்ன் செய்ய விரும்புபவர்கள் முட்டை சாப்பிடலாம். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் 20 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன, இவற்றில் புரதம் மட்டுமின்றி அதிகளவு நார்ச்சத்தும் உள்ளது இது உங்கள் வையரை நிறைவாக்குகிறது. மேலும் இது உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை தேவையற்ற கழிவுகளையும் நீக்க உதவுகிறது.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ