தற்போது நிறைய ஆண்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையில் விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். இதனால் அவர்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்சனை எழுகிறது. ஹைட்ராலிக் இரத்த விளைவின் காரணமாக ஆண்களுக்கு விறைப்புத்தன்மை ஏற்படுகிறது, பாலியல் உணர்வு தூண்டப்படும்போது, ​​​​உடல் ஆண்களின் அந்தரங்க பகுதியை நோக்கி அதிக அளவில் இரத்தத்தை செலுத்துகிறது. விறைப்புத்தன்மை மிகவும் குறைவாக அல்லது மோசமாக இருப்பதினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் பாலியல் வாழ்க்கை பெரிது பாதிக்கப்படுவதோடு, குழந்தை பிறக்கும் வாய்ப்பும் இல்லாமல் போகும். ஒரு ஆணுக்கு தன்னுடைய விறைப்புத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள ஆண்குறியில் போதுமான இரத்த ஓட்டம் பாய வேண்டும். அப்பொழுது தான் நரம்புகள் தொடர்ச்சியான தூண்டுதல்களை அனுப்ப முடியும். ஏனெனில் ஆணுறுப்பில் எலும்புகள் இல்லை. இந்நிலையில், இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மற்றும் விறைப்புத்தன்மை பிரச்சனையை நீக்கும் உணவுகள் பற்றி கூறினார். நீங்கள் சுமார் 1 மாத காலம் சாப்பிட, இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விறப்பு தன்மை பிர்ச்சனையை போக்கும் உணவுகள்


1. ஆழி என்கிற கடல் சிப்பி  (Oyster)


கடல் சிப்பி என்றும் அழைக்கப்படும் ஆழியை உணவாக சாப்பிடும் வழக்கம் தற்போது பரவலாக காணப்படுகிறது . இதில் துத்தநாகத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவையும் அதிகரிக்கிறது.


2. சிவப்பு இறைச்சி (Red Meat)


சிவப்பு இறைச்சியில் அதிக அளவு எல்-கார்னைடைன் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன, அவை லிபிடோ, பாலியல் செயல்பாடு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆகியவற்றை அதிகரிக்க உதவும். டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் (Testosterone Hormone) குறைபாடு வயதான ஆண்களிடம் காணப்படும் பொதுவான பிரச்சனையாகும்.


மேலும் படிக்க | Sperm Health Tips: உங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்த வழிகள் என்ன?


3. கருமிளகு


கருப்பு மிளகு தூளில் கேப்சைசின் உள்ளது, இது எண்டோர்பின்களை வெளியிடுகிறது மற்றும் பாலியல் இன்பத்தை அதிகரிக்கிறது.


4. பூண்டு


பூண்டில் உள்ள அல்லிசின் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை வலுப்படுத்த உதவுகிறது.


5. பீட்ரூட்


பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் நைட்ரேட்டாகவும் பின்னர் நைட்ரிக் ஆக்சைடாகவும் மாறும். இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.


6. செலரி


செலரி விதைகள் பாலுணர்வை தூண்டும் உணவாகும். இது பாலியல் ஆசையை அதிகரிக்கிறது மற்றும் பாலியல் சுரப்பிகளை தூண்டுகிறது. இதன் மூலம் வலுவான விறைப்புத்தன்மையை அடைய உதவுகிறது.


7. ப்ளுபெர்ரி


ப்ளுபெர்ரி என்னும் அவுரிநெல்லியில் உள்ள கலவைகள் இரத்த நாளங்களை தளர்த்தவும். உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை வெளியேற்றவும் உதவுகிறது.


8. தர்பூசணி


தர்பூசணியில் L-Citrullinee மற்றும் Lycopene உள்ளது. எல்-சிட்ருலின் அர்ஜினைனாக மாற்றப்படுகிறது.  இது டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கிறது.
லைகோபீன் இரத்த நாளங்களை தளர்த்துகிறது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | கோடை வந்து விட்டது... குழந்தைகளுக்கு ‘இந்த’ உணவுகளை கொடுக்காதீங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ