ஆண்மையை அதிகரிக்கும் 'டெஸ்டோஸ்டிரோன்' ஹார்மோன் நிறைந்த சூப்பர் உணவுகள்

ஆண்மை அதிகரிக்க டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அத்தியாவசியம். இந்த ஹார்மோன் குறைபாடு இருந்தால், ஆண்களுக்கு சிக்ஸ் பேக்ஸ் கனவு நிறைவேறாமல் போய்விடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 2, 2022, 10:34 AM IST
  • ஆண்மை அதிகரிக்க டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அத்தியாவசியம்.
  • டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் விந்தணுக்களின் உற்பத்தியை சரியாக வைத்திருக்கும்.
  • தாடி, மார்பு போன்ற ஆண்களின் உடலில் தோன்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஆண்மையை அதிகரிக்கும் 'டெஸ்டோஸ்டிரோன்' ஹார்மோன் நிறைந்த சூப்பர் உணவுகள் title=

ஆண்கள் பருவமடைதலுக்கும், ஆண்மைக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அவசியம். இந்த ஹார்மோன் குறைபாடு இருந்தால், ஆண்களுக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். எப்போதும் ஒரு வித சோர்வையும், பலவீனத்தையும் உணரலாம். மன உளைச்சல் ஏற்படலாம். இவையெல்லாம் இந்த டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் குறைபாட்டால் வருவதே.காலை உணவுகளில் சில உணவுகளை சேர்த்துக் கொள்வது டெஸ்டோஸ்டிரோன் இரண்டு மடங்கு வேகமாக அதிகரிக்க ஆரம்பிக்கும். 

காலை உணவுத் திட்டம் சிறப்பானதாக இருந்தால், அந்த நாளே சிறப்பானதாக அமையும். ஜிம்முக்கு செல்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நல்ல டயட் எடுக்க ஆரம்பித்தால், அவர்களின் தசைகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் இரண்டு மடங்கு வேகமாக அதிகரிக்க ஆரம்பிக்கும். இரவில் நாம் தூங்கும் போது, ​​நம் மனம், இதயம் மற்றும் உடல் மிகவும் அமைதியான முறையில் செல்லும். நாள் முழுவதும் முழு ஆற்றலுடன் வேலை செய்ய, காலை உணவை சிறப்பாக தேர்வு செய்ய வேண்டும். நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் உணவை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் காரணமாக நமது டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, தசைகள் நல்ல வளர்ச்சி அடையும். எனவே காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய அந்த சூப்பர் உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்

கொத்துக் கடலை, பாசிப் பருப்பு,  திராட்சை

கொத்துக் கடலை, பாசிப் பருப்பு,  திராட்சை ஆகியவற்றை உங்கள் தினசரி காலையில் சாப்பிடுவது சிறந்த பலன் கிடைக்கும், ஏனெனில் அவை பண்டைய காலங்களிலிருந்து நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என முன்னோர்கள் அறிவுரை கூறி கடைபிடித்த உணவுகள். முளை கட்டிய பாசிப்பருப்பு, முளை கட்டிய கொத்துக் கடலை ஆகியவற்றை தவறாமல் எடுத்துக் கொள்ளவும். மேலும் உலர்  திராட்சையை  இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் எழுந்தவுடன் இவற்றை உட்கொள்ளுங்கள். இதில் உள்ள வைட்டமின்கள் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதுடன், உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

அவகேடோ என்னும் வெண்ணெய் பழம்

அவகேடோ சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. காலையில் வெறும் வயிற்றில் ஒரு பாதி மட்டும் சாப்பிட்டால் போதும். இதனை உட்கொள்வதன் மூலம் நமது இதயம் ஆரோக்கியமாக இருக்கும். செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களைக் குறைக்க உதவுகிறது. எனவே, நீங்கள் உங்கள் உணவு அட்டவணையை தயாரிக்கும் போதெல்லாம், கண்டிப்பாக அதில் அவகேடோ பழங்களைச் சேர்க்கவும்.

ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸ் பல நன்மைகளையும் கொண்டுள்ளது. எடையைக் குறைக்கவும் நீரிழிவு நோயைக் குறைக்கவும் ஓட்ஸ் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஜிம்மிற்கு செல்பவர்களால் அடிக்கடி உட்கொள்ளப்படுகிறது. ஏனெனில் இது உங்கள் தசைகளுக்கும் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

நிறைய தண்ணீர்

காலையில் எழுந்த பிறகு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் எளிதில் அகற்றப்படும். மேலும் நாள் முழுவதும் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், தண்ணீர் மற்றும் குடலின் உதவியுடன், அது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அந்த உணவின் மூலங்களைச் சென்றடைய உதவுகிறது.

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உடலுறவுக்கான ஆசையை அதிகரித்து, விந்தணுக்களின் உற்பத்தியை சரியாக வைத்திருப்பதோடு, தாடி, மார்பு போன்ற ஆண்களின் உடலில் தோன்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News