பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப உணவுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். அதனால், மழைக்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிந்து கொள்வதைபோல் மழைக்காலங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகளையும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலை காய்கறிகள்


இலைக்காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியமானது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அது உண்மை என்றாலும், அதில் இருக்கும் பாதகத்தையும் நீங்கள் அறிந்து வைத்துக் கொள்வது அவசியம். மழைக்காலங்களில் அசுத்தமான இடங்களில் வளரும் இலைக் காய்கறிகளில் பாக்டீரியா தொற்றுகள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருக்கும். அதனை நீங்கள் சுத்தமாக கழுவி, நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். இதனை செய்ய முடியாத சூழலில் தவிர்ப்பது நல்லது. 


மேலும் படிக்க | குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? மருத்துவர்களின் அறிவுரை!


கடல் உணவு


மழைக்காலங்களில் கடல் உணவுகள் ஏன் தவிர்க்க வேண்டும் என்றால், மீனவர்கள் அந்த நேரத்தில் கடலுக்கு செல்ல மாட்டார்கள். இதனால், ஏற்கனவே பிடித்து குளிர்விப்பான்களில் அடைத்து வைக்கப்பட்ட பழைய மீன் உள்ளிட்ட கடல் உணவுகளையே விற்பனை செய்ய நேரிடும். இதுமட்டுமல்லாமல், மீன் உள்ளிட்டவைகள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனங்களும் கலக்கப்பட்டிருக்கும் என்பதால், அத்தகைய கடல் உணவுகளை சாப்பிடும்போது உடல் உபாதைகளுக்கு உள்ளாக நேரிடும். 


பாட்டில் பானங்கள்


பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்களை நீங்கள் சாப்பிடக்கூடாது. அவற்றில் இருக்கும் செயற்கை சர்க்கரை உள்ளிட்டவை நொதிகளின் செயல்பாட்டைக் குறைத்துவிடும். செரிமானத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்துவதோடு, வாயுத்தொல்லை, அமிலத்தன்மை, மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் வழிவகுத்துவிடும். இதனால், நீங்கள் விழிப்போடு இருப்பது அவசியம். 


தயிர்


தயிரில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கும்போதிலும், மழைக்காலத்தில் அவற்றை சாப்பிடும்போது உடல் உபாதைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. மழைக்காலத்தில் தயிரை சாப்பிட்டால் ஒவ்வாமை, செரிமான பிரச்சனைகள் ஏற்படும். தயிருக்கு மாற்றாக சூடான பால் சாப்பிடலாம். 


மேலும் படிக்க | முள்ளங்கி இலை: சிறுநீரக கல் முதல் மூலநோய் வரை, பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு


மேலும் படிக்க | Mandous Cyclone: மாண்டஸ் புயலால் வீட்டை இழந்து தவிக்கும் புதுச்சேரி மக்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ