ஒவ்வொரு இரவும் நல்ல தூக்கம் அவசியம், ஏனெனில் நல்ல தூக்கம் தான் நமது உடலை ரீசார்ஜ் செய்து சுறுசுறுப்பாக செயல்பட அனுமதிக்கிறது,  முதல் நாள் இரவு நன்றாக தூங்கினால் தான் நம்மால் அடுத்த நாள் எவ்வித சோர்வுமின்றி உற்சாகமாக செயல்படுவதோடு, மனதும், உடலும் புத்துணர்வாக இருக்கும்.  ஆனால் இன்றைய காலகட்டத்தில் நல்ல உறக்கத்தை பெறுவது சவாலான ஒன்றாக இருக்கிறது.  பரபரப்பான வாழ்க்கை, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாவின் அதிகப்படியான ஆதிக்கம் போன்றவற்றால் நம்முடைய தூக்கம் வெகுவாக பாதிக்கிறது.  தூக்கமின்மை காரணமாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படக்கூடும். இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற்று ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் நீங்கள் சில பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சேதமடைந்த நுரையீரலுக்கும் புத்துயிர் கொடுக்கும் ‘வஜ்ரதந்தி’ மலர்!


இரவு நாம் படுக்கைக்கு செல்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட காலையில் நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே இரவில் நல்ல தூக்கத்தை பெற முடியும்.  காலையில் தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக இயற்கை ஒளியுடன் நீங்கள் இணைய வேண்டும்., குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நீங்கள் அதிகாலை சூரிய ஒளியைப் பெறவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.  அதிகாலை நேரத்தில் சூரிய ஒளி நம் மீது படுவதால் நமது உடலில் சர்க்காடியன் ரிதம்ஸ் மீட்டமைக்கப்படுவதோடு, சூரியனில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்கள் நம் மீது படுவதால் இரவில் ஆழ்ந்த உறக்கததிற்கு உதவிபுரியும் மெலடோனின் மேம்படுகிறது.  நல்ல தூக்கமே ஒரு மனிதனின் சிறந்த மருந்து என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


காலை நேரத்தில் உங்களால் சூரிய ஒளியை பெறமுடியாவிட்டால் முடிந்தவரை மாலை நேரத்திலாவது சூரிய ஒளியை பெற முயற்சி செய்யலாம்.  மாலை நேரத்து சூரியனில் கூட அகச்சிவப்பு நன்மைகள் நிறைந்துள்ளது, காலையில் முடியாதவர்கள் மாலையில் இதை செய்வது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.  பொதுவாக வைட்டமின் டி தூக்கமின்மை மற்றும் தூக்க ஒழுங்குமுறையை மேம்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. உடலில் போதிய அளவு வைட்டமின் டி இல்லாததால், தூக்கத்தின் அளவு குறைதல், தூக்கமின்மை மற்றும் இரவு நேரத்தில் அடிக்கடி விழிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.  ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் 15 முதல் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் சூரிய ஒளியில் நிற்பது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.  அதேசமயம் தோல் புண்கள், புற்றுநோய்கள், சுருக்கங்கள் , வறட்சி, தொய்வு மற்றும் மந்தமான, தோல் தோற்றம் மற்றும் நிறமி மாற்றங்கள் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் சூரிய ஒளியில் நிற்பதை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Jaggery Benefits: ‘இந்த’ செய்தியை படித்தால் சர்க்கரையில் இருந்து வெல்லத்திற்கு மாறிடுவீங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ