Weight Loss: என்ன பண்ணாலும் எடை குறையலயா? இது காரணமாக இருக்கலாம்

Weight Loss: உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். இருப்பினும், பலரால் தங்கள் உடல் எடையை குறைக்க முடிவதில்லை. இதற்கான காரணம் என்ன? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 20, 2022, 02:30 PM IST
  • உடல் பருமன் உணவு நேரத்துடன் நேரடியாக தொடர்புடையது.
  • உணவு உண்ணும் நேரம் நமது உடலின் பிட்னஸில் மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
  • நாம் தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவை உட்கொண்டால், உணவு எளிதில் ஜீரணமாகும்.
Weight Loss: என்ன பண்ணாலும் எடை குறையலயா? இது காரணமாக இருக்கலாம் title=

எடை இழப்புக்கான முக்கிய காரணம்: தற்காலத்தில், மனிதர்கள் எதிர்கொள்ளும் அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமன் என்பது ஒரு பெரிய நோயாக மாறி வருகிறது. பணம் ஈட்டும் ஆசையில், மக்கள் தங்கள் உணவையும் உறக்கத்தையும் கூட மறந்துவிடுகிறார்கள். 24 மணி நேரமும் பல்வேறு பணிகளில் பிஸியாக இருப்பதால், பலரால் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளவோ, உறங்கவோ முடிவதில்லை. இதன் காரணமாக, அதிக எடை, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். சிலர் ஜிம்மில் பல மணி நேரம் செலவு செய்கிறார்கள். பல வித கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். எனினும், இவ்வளவு செய்த பின்னரும், பலரால் தங்கள் உடல் எடையை குறைக்க முடிவதில்லை. இதற்கான காரணம் என்ன? இதைப் பற்றி இந்த பதிவில் விளக்கமாக காணலாம். 

உடல் பருமன் உணவு நேரத்துடன் நேரடியாக தொடர்புடையது
 
வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது

உணவு உண்ணும் நேரம் நமது உடலின் பிட்னஸில் மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் கருதுகிறார்கள். நாம் தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவை உட்கொண்டால், உணவு எளிதில் ஜீரணமாகும். இப்படி செய்வதால் நமது வளர்சிதை மாற்றம் அதிகரித்து, அந்த ஆற்றல் நம் உடலில் பயன்படுத்தப்படுகிறது. நாம் தினமும் ஒரே நேரத்தில் உணவை உட்கொள்ளவில்லை என்றால், அந்த உணவு வயிற்றில் செரிக்கப்படாமல் இருக்கும். இதன் காரணமாக உடல் பருமன் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்குகிறது.

மேலும் படிக்க | Water Diabetes: நீர் நீரிழிவும் சுகர் டயபடிஸ் இரண்டும் ஒத்தவை ஆனால் தொடர்புடையவையல்ல 

அதிகமாக சாப்பிடும் பிரச்சனை அதிகரிக்கிறது

தினமும் ஒரு வழக்கமான நேரத்தில் உணவு உட்கொள்ளவில்லை என்றால், வழக்கமாக சாப்பிடும் நேரம் வந்தவுடன் சில நேரங்களில் நம் உடல் பசியுடன் இருக்கும். இதனால் நம்மை அறியாமல் நாம் சில சமயங்களில் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவோம். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், உங்கள் எலும்புகள் மற்றும் செல்கள் சேதமடைகின்றன. மேலும் இதனால் உடல் வீக்கம் ஏற்படத் தொடங்குகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், எவ்வளவுதான் ஜிம் சென்று பலவித உடற்பயிற்சிகளை செய்தாலும், அதிகரித்த எடையை எளிதில் குறைக்க முடியாது.

நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும்

நாம் நமது தினசரி உணவில் என்னென்ன உணவுகளை உட்கொள்கிறோம் என்பதும் நமது உடல் பருமனை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் அதிக துரித உணவு, ஜங்க் ஃபுட் அல்லது பேக் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டால், ஜிம் சென்றாலும் சரி ஜாகிங் போனாலும் சரி, ஒருபோதும் எடையை இழக்க முடியாது. இத்தகைய உணவுகள் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். 

ஆகையால் இந்த ஆரோக்கியமற்ற உணவுகளிலிருந்து எப்போதும் விலகி இருப்பது மிக முக்கியமாகும். அதற்கு பதிலாக, நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதுதான் சிறந்தது. இதன் மூலம், உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருப்பதுடன் எடையும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குழந்தைகளுக்கு கொலஸ்ட்ரால் வருமா? அறிகுறிகள் இதோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News