உடல் பருமனை குறைப்பது எப்படி, தொப்பை கொழுப்பை கரைப்பது எப்படி என, எடை இழப்பு  குறிப்புகள், என்பது இணையத்தில் எல்லா நேரங்களிலும் அதிகம் தேடப்படும் மிக முக்கிய சொல் எனலாம். நமது நவீன உணவுத் தேர்வுகள் மற்றும் ஆரோக்கியற்ற வாழ்க்கை முறை ஆகியவை காரணமாக பெரும்பாலானோருக்கு உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இந்நிலையில் உடல் பருமனை குறைக்க நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில விஷ்யங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். ஊட்டச்சத்து மிக்க, கொழிப்பை எரிக்கும் உணவுகள தேர்வு செய்வது முதல் உடற்பயிற்சி வரை, நீங்கள் கடைபிடிக்க வேண்டிய திறமையான எடை- குறைப்பு நுட்பங்களை வகுப்பது விரைவாக எடை இழக்க உதவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடற்பயிற்சி


அவ்வப்போது உடல் பயிற்சி செய்யாமல், தினமும் உடல்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தசைகளை வலுவாக்குவது, வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளில் நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஓடுதல் ஆகியவை அடங்கும். மறுபுறம், கலோரிகளை எரிக்க, ஒரு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது மிதமான அளவில் ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபட முயற்சிக்கவும்.


நிறைய தண்ணீர் குடிப்பது


நாள் முழுவதும் நன்கு நீரேற்றமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். உடல் எடை இழக்க தண்ணீர் அதிகமாக குடிப்பது  மிக அவசியம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, செரிமான அமைப்பை சீராக வைத்து. மலச்சிக்கலை போக்குகிறது. சிறந்த குடல் ஆரோக்கியம் இல்லாமல் உடல் எடையை குறைப்பது (Weight Loss Tips) சாத்தியம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


போதுமான தூக்கம்


தினமும் இரவு ஏழு முதல் எட்டு மணி நேரம் நன்றாக தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தூக்கமின்மை ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். இது பசியை தூண்டி, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.  மேலும்,  வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும்.


மேலும் படிக்க | அற்புத பலன் தரும் குளிர்காலக் கீரை! கடுகுக்கீரை கூட்டு சாப்பிட்டால் நோய்கள் ஓடிப்போகும்


ஆரோக்கியமான உணவு தேர்வு


நீங்கள் ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து கவனமாக சாப்பிடும் போது, அது உடல் எடை குறைய பெரிதும் உதவுகிறது. அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க, சாப்பிடும் போது கவனச்சிதறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும். டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, மொபைல் போன் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். உங்கள் உணவை அனுபவித்து சாப்பிடவும். அவசர்மாக சாப்பிடுவது வயிறு நிறைந்த உணர்வைத் தராது.


அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரைத சீரான உணவு


உடல் எடை குறைய, அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேவை. புரதம் மிக அதிகமாக எடுத்துக் கொள்வது, அல்லது கொழுப்புள்ள உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது ஆகியவை பலன் தராது. ஆரோக்கியமான, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமநிலையான உணவை உண்பதன் மூலம் தொடங்குங்கள். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் மெலிந்த புரதங்கள் உள்ளிட்ட முழுமையான, பதப்படுத்தப்படாத உணவுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துங்கள். குறைவான பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் அதிக கலோரி சிற்றுண்டிகளை தவிர்த்து விடுங்கள்.


கலோரி அளவு


உடல் எடையை குறைக்க உங்கள் உடலுக்கு தேவையான கலோரிகளை விட குறைவான கலோரிகளை உட்கொள்ள வேண்டும். உங்கள் தினசரி உட்கொள்ளலைக் கண்காணித்து, டயட் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவதன் மூலம், நீங்கள் கலோரி பற்றாக்குறையை உருவாக்கலாம். நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் வகைகளில் கவனம் செலுத்துங்கள்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | JN1 கொரோனா இல்லை என்றாலும், காய்ச்சல் இருந்தால் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ