Health benefits of Mushrooms: சைவம், அசைவம் என இருவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் காளான். காளானில் எக்கச்சக்க நன்மைகள் உள்ளது. இதில் புரதச்சத்து மட்டுமல்லாது நார்ச்சத்து வைட்டமின்கள் , தாதுக்கள் என பல சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது. காய்கறிகளில் அதிக புரதச்சத்து உள்ள காய்கறிகளில் காளான் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமல்ல இதில் கலோரிகளும் மிகக்குறைவாக இருப்பதால் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு நோய்களைத் தடுக்கும் காளான்


காளானில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதோடு, பலதரப்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கும் மருத்துவ பண்புகளும் நிறைந்துள்ளது. மூளை பாதிப்பு தொடர்பான அல்சைமர் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், புற்றுநோய் வராமல் ஆற்றலும் காளானுக்கு உள்ளது. இது தவிர , நமது வாழ்க்கை சம்பந்தப்பட்ட நீரழிவு ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமலும் கட்டுப்படுத்தும். கொலஸ்ட்ராலை குறைப்பதால் ஆரோக்கியமானது.


செல் சேதத்தை தடுக்கும் காளான்


காளானில் அதிக அளவு செலினியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி6 போன்றவை உள்ளதால் செல் சேதத்தை தடுக்க பெரிதும் உதவுகிறது. காலனில் உள்ள விட்டமின் டி உயிரணு வளர்ச்சிக்கும் உதவும். காளானில் உள்ள விட்டமின் பி6 ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது.


புற்று நோயை தடுக்கும் காளான்


காளானின் மருத்துவ பண்புகள் காரணமாக, சீனா மற்றும் ஜப்பானில் இவை புற்றுநோய்க்கான சிகிச்சையில் துணைப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. தினமும் காளான் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, புற்றுநோய் வருவதற்கான அபாயம் 45 சதவீதம் குறைவதாக ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கும், அதன் பக்க விளைவின் பாதிப்பை குறைக்க காலம் உதவுகிறது. கீமோதெரபி என்னும் கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு ஏற்படும் குமட்டல், எலும்புகள் வலுவை இழத்தல், தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகளை குறைக்கிறது.


மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: இவைதான் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்!!


மூளை திறனை மேம்படுத்தும் காளான்


காளான்கள் நிரம்பிய கடத்தியின் செயல்பாட்டை மேம்படுத்தி மூளை திறனை அதிகரிக்கிறது. அதோடு முன்பே தெரிவித்தது போல நினைவாற்றலை மேம்படுத்தும் திறன் கொண்ட காளான், வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் போன்ற நோய் வராமல் தடுக்கிறது. மேலும் மூளையில் ஏற்படும் வீக்கம், ஆக்ஸனேட் அழுத்தம் ஆகியவற்றை குறித்து மூளை ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.


வைட்டமின் டி சத்தின் களஞ்சியமாக விளங்கும் காளான்


சூரிய ஒளி விட்டமின் டி சத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் நிலையில், இயற்கையாக உணவு மூலம் கிடைக்கும் வைட்டமின் டி யை பெற காளான் மிகச்சிறந்தது. இதனால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் மட்டுமல்ல விட்டமின் டி யும் அவசியம். விட்டமின் டி போதுமான அளவு இருந்தால் தான் உடல் கால்சியம் சத்தை உறிஞ்சிக் கொள்ளும்.


செரிமானத்தை மேம்படுத்தும் காளான்


குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால், திருமண விழா நோயை நாம் தவிர்த்து விடலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ப்ரோ பயோட்டிக்குகள் நிறைந்த உணவுகள் உதவும். இவை குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை ஊக்குவித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. 


நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் காளான்


உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நுண்ணுயிரிகள் காளான்களில் அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்களில் செலினியமும் அடங்கும். உடலில் ஆக்சிஜனேற்ற நொதிகளை உருவாக்கி, உயிர் அணுக்கள் சேதம் அடைவதை காலம் தடுக்கிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | தயிர் சாதம்..... சுவையிலும் ஆரோக்கிய நன்மைகளிலும் டாப் டக்கர்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ