Benefits of Curd Rice: தென்னிந்திய உணவின் தயிர் சாதம் சுவையானது மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. தயிர் கால்சியம், புரதம், வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள சுவையான புரோபாயோடிக் உணவு. இதில் நினைவாற்றலை பெருக்குவது முதல் உடலுக்கு ஆற்றலை வழங்கி எலும்புகளை பலப்படுத்துவது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் வழங்குகிறது. தயிர் சாதம் ஒரு சுவையான மற்றும் ஊட்டமளிக்கும் உணவு என்பதோடு, குறிப்பாக எல்லா காலநிலைகளிலும் சாப்பிடக்கூடிய
தயிர் சாதத்தின் ஆரோக்கிய நன்மைகள் (Curd Rice Benefits)
குடல் ஆரோக்கியத்திற்கான புரோபயாடிக்குகள்:
தயிர் சாதம் ஒரு புரோபயாடிக் நிறைந்த உணவாகும். ஜீரணிக்க எளிதானது. தயிரில் உள்ள பொருட்கள் குடல் பாக்டீரியாவின் ஆரோக்கியமான (Health Tips) சமநிலையை பராமரிக்க உதவுகிறது. தயிரில் உள்ள புரோபயாடிக் தன்மை செரிமான உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகின்றன. பால் தயிராக உறையும் போது அதில் உள்ள லாக்டோஸ் உடைக்கப்படுவதால் லாக்டோஸ் உண்டால் அலர்ஜி அல்லது பாதிப்பு ஏற்படுபவர்களும் தயிரை உட்கொள்ளலாம்.
மேலும் படிக்க | உடல் எடையை வேகமா குறைக்கும் பப்பாளி.. இன்னும் பல நன்மைகளும் இதில் இருக்கு
எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்
எலும்புகள் (Bone Health) மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்க தேவையான கால்சியம் போன்ற முக்கிய கூறுகளால் நிறைந்துள்ளது. பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்த, தயிர் உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. இது கீல்வாதத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் தயிர், பியூரின்களை வெளியேற்ற வேலை செய்கிறது. எனவே யூரிக் அமில பிரச்சனை இருப்பவர்கள், தயிர் சாதத்தை சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
மூளைக்கும் உடலுக்கும் ஆற்றலை வழங்கும் தயிர் சாதம்
மூளைக்கு ஆற்றலை வழங்கி நினைவாற்றலை அதிகரிக்கும் திறன் தயிருக்கு உண்டு. மூளைக்கு மட்டுமல்ல உடலுக்கும் ஆற்றலை அள்ளிக் கொடுக்கிறது. எனவே, சோர்வாக இருந்தால், உடனடியாக தயிர் எடுத்துக் சாப்பிட உடல் புத்துணர்ச்சி பெறும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த, தயிர் ஒரு ஆற்றல் ஊக்கியாகும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு, கடின உழைப்பிற்கு பிறகு ஏற்படும் சோர்வை உடனடியாக நீக்க உதவுகிறது.
உடல் சூட்டை தணிக்கும் தயிர் சாதம்
தயிர் சாதம் உடலுக்கு குளிர்ச்சி தரும். இது உடலின் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. எனவே சூடான உடல்வாகு கொண்டவர்கள், அல்லது அஜீரணத்தை அனுபவிக்கும் நபர்களுக்கு தயிர் சாதம் சிறந்த தேர்வாக இருக்கும்.
உடல் பருமனை கட்டுப்படுத்தும் தயிர் சாதம்:
நீங்கள் உடல் எடையை குறைக்க (Weight Loss) முயற்சிக்கிறீர்கள் என்றால், தயிர் சாதம் சிறந்த தேர்வாக இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. உடல் பருமை குறைக்க மிகவும் தேவையான புரத சத்தும் இதில் நிறைந்துள்ளது. இது பசியைக் குறைக்கிறது. இதனால், ஒட்டுமொத்த கலோரி நுகர்வு குறைகிறது. தயிர் சாதம் ஒரு எளிய மற்றும் லைட்டான உணவாகும். இது எடையை பராமரிக்க அல்லது குறைக்க முயற்சிக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தயிர் சாதம்:
தயிர் சாதத்தில் உள்ள முக்கிய மூலப்பொருளான தயிரில் வைட்டமின் டி மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க உதவுகிறது. தொற்று நோய்கள் மற்றும் பருவகால நோய்கள் பாதிக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: இவைதான் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ