பூசணிக்காய் மட்டுமல்ல, அதன் விதைகளும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதை நினைவில் வைத்திருந்தால் அதனை தூக்கி எறியும் எண்ணமே உங்களுக்கு வராது. இதில் நார்ச்சத்து, புரதச்சத்து , இரும்புச்சத்து மட்டுமல்லாது வைட்டமின் ஈ சத்தும் நிறைவாக உள்ளது. மேலும், இதில் மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் கொண்டுள்ளதால், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து நமது செல்களைப் பாதுகாக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்களின் பாலியல் பிரச்சனைக்கு தீர்வு


ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் பூசணி விதை விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும். விந்தணு குறைபாட்டிற்கு துத்தநாக சத்து குறைபாடும் ஒரு காரணமாக உள்ள நிலையில், துத்தநாகச் சத்து அதிகம் கொண்ட பூசணி விதைகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை மட்டும் அல்லாமல் விந்து சக்தியும் அதிகரிக்கும்


புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்


பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்று பல சோதனைகள் காட்டுகின்றன. அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. பூசணி விதை பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மார்பக புற்றுநோயையும், ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயையும் தடுக்கிறது என்கின்றனர் (Health Tips) நிபுணர்கள். 


எலும்புகள் ஆரோக்கியம்


பூசணி விதைகளில் எலும்புகளின் வலிமைக்கு அவசியமான கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளனஇந்த கனிமம் நம் உடலில் குறைந்த அளவில் இருந்தால், நமது எலும்புகள் வலுவிழந்து ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் அதிகரிக்கும். உணவில் அடிக்கடி பூசணி விதைகளை சேர்த்துக் கொள்வது எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற அபாயங்களைக் குறைக்கிறது. கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாப்பிடுவதால் நிவாரணம் பெறலாம். 


மேலும் படிக்க | பப்பாளி பழத்தை ஏன் தினமும் சாப்பிட வேண்டும்... வலுவான 10 காரணங்கள் இதோ...


இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பூசணி விதை


நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் மக்னீசியம் உள்ளது. இது இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம். 


நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பூசணி விதை


பூசணி விதைகளில் அதிக அளவு துத்தநாகம் இருப்பதால், அது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பெரிதும் பலப்படுத்துகிறது. இதை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள நொதிகள் அதிக சுறுசுறுப்பாக செயல்படுவதோடு, எந்த தொற்றுநோயையும் எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிக்கிறது. இது நம் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதை உட்கொண்டால், காயங்கள் விரைவில் குணமடையும். இது தவிர, பூசணி விதை தண்ணீரை காலையில் குடிப்பதால், உங்கள் செரிமானத்தை மேம்படுத்தலாம்.


சிறந்த தூக்கம்


உடலில் செரோடோனின் மற்றும் மெலடோனின் அளவு அதிகரித்தால், நமக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். பூசணி விதைகளை உட்கொள்வது டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தை வழங்குகிறது, இது தூக்கத்திற்கு தேவையான ஹார்மோனை அதிகரிக்கிறது. இதனால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சனை தீரும். 


பூசணி விதைகளை உனவில் சேர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்


பூசணி விதைகளை வறுத்து அல்லது வறுக்காமல் சாப்பிடலாம். இதை சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம் மற்றும் பகலில் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்த விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து குடிக்கலாம். பூசணி விதைகளை சாலட்டில் சேர்த்து சாப்பிடுவது இன்னும் சுவையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஸ்மூத்தியில் பூசணி விதைகளை சேர்த்து குடித்து வந்தால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும். இதை ஜூஸ் ஓட்ஸ், கஞ்சி, தயிர் ஆகியவற்றில் சேர்த்தும் சாப்பிடலாம்.


நாளொன்றுக்கு எந்த அளவு பூசணி விதையை எடுத்துக் கொள்ளலாம்?


அமிர்தமே ஆனாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சு என்று கூறுவார்கள். பூசணி விதையில் எண்ணற்ற நலன்கள் உண்டு என்றாலும், அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 5 கிராம் பூசணி விதைகளை உட்கொள்ளலாம். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Clove Benefits: மன அழுத்தம் முதல் வெயிட் லாஸ் வரை... கிராம்பு என்னும் சிறந்த ஆயுர்வேத மருந்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ