தொப்பையை குறைக்க ஒரு சுவையான வழி: பூண்டை இப்படி சாப்பிடுங்க போதும்
Weight Loss Tips: சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அத்தகைய ஒரு அற்புதமான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss Tips: உடல் பருமன் பொதுவாக ஒரு நோயாக கருதப்படுவதில்லை. ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பார்த்தால், அது எந்த நோய்க்கும் குறைவானது இல்லை என்றே தோன்றுகிறது. உடல் பருமனால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. உடல் பருமனால் 13 வகையான புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உடல் பருமனை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். பல மணி நேரங்களை ஜிம்மில் செலவிடும் நபர்களும் உண்டு. பெரும்பாலானோர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில் இவற்றாலும் தேவையான பலன்களை பெற முடிவதில்லை. சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அத்தகைய ஒரு அற்புதமான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Garlic)
பூண்டு உணவுக்கு வித்தியாசமான சுவையை தருகிறது. பூண்டு இல்லாமல் பல உணவு வகைகளில் சுவையே தெரியாது என்பது உண்மை. இது ஒரு தனித்துவமான காரமான சுவை கொண்டது. இது உணவுக்கு ஒரு தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்தை சேர்க்கிறது. பூண்டு உணவில் சுவையை சேர்ப்பதைத் தவிர, நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. பொதுவாக மக்கள் பூண்டை உணவுல் உட்கொள்கிறார்கள். ஆனால் பூண்டை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.
உடல் எடையை குறைக்கும் பூண்டு (Garlic For Weight Loss)
பல வித ஆரோக்கிய நன்மைகளுடன் எடையைக் குறைப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேகவைத்த அல்லது லேசாக வதக்கிய பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதை எப்படி உட்கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
எடை குறைப்பதில் உதவும் (Home Remedy For Weight Loss)
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை கட்டுப்படுத்தலாம், தொப்பை கொழுப்பையும் குறைக்கலாம். இதில் உள்ள கூறுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. இது கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. ஆகையால் பூண்டு உடல் எடையைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்க... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் (Home Remedy For Immunity)
பூண்டில் (Garlic) ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. சமைத்த பூண்டுப் பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலமும் பல நோய்களுக்கு ஆளாவதைத் தவிர்க்கலாம்.
உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் (Home Remedy To Detox Body)
பூண்டு உட்கொள்வது உடலில் சேரும் அழுக்குகளை அகற்றுவதற்கும் நன்மை பயக்கும். சமைத்த பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் சேரும் நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றலாம்.
செரிமான அமைப்பு ஆரோக்கியமாகும் (Home Remedy For Digestion)
பூண்டு பற்களை உட்கொள்வது ஆரோக்கியமான செரிமானத்தை பராமரிக்க நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | டின்னருக்கு பின் 20 நிமிட நடை... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ