Gas Problem Remedies: வாயுத் தொல்லையால் சிரமப்படுபவர்களுக்குத்தான் அதன் கஷ்டம் தெரியும். வயிற்றுப் பொருமல்  சிகிச்சையளிக்கப் பயன்படுத்தக்கூடிய சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். முதலில் வயிற்றுப் பொருமல் என்றால் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயிற்றில் வாயு சேர்வதை வயிற்றுப் பொருமல் என்கிறோம். ப்லேடஸ் என்றும் இது அழைக்கப்படுகிறது. வாயு என்பது பொதுவாக, ஏப்பம் மற்றும் ஆசன வாய் வழியே பிரியும். வயிற்றில் வாயு தங்கிவிட்டால், அது வயிறை வீங்கச் செய்வதோடு, வேறு சில பிரச்சனைகளையும் கொடுக்கும். 


பொதுவாக நாம் சாப்பிடும்போதும், பேசும்போதும் உடலுக்குள் வாயு நுழைகிறது. அது மட்டுமல்ல, பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள், உணவை செரிமாணம் (Food Digestion)  செய்யும்போது வாயுவை உற்பத்தி செய்கிறது.


பிடித்த உணவை உண்ண முடிந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருக்கும்? குளிர்காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக உணவு உண்வது வழக்கம். குளிர்காலத்தில் அதிக உணவை உட்கொள்வதால், வயிற்றில் வாயு உருவாகத் தொடங்குகிறது. எனவே, வாயு தொல்லை ஏற்படாமல் இருக்க சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.


ALSO READ | குழந்தைகளுக்கு அதிக ஆபத்தான உணவுகள்!


மன அழுத்தம் செரிமான பிரச்சனையை அதிகரிக்கும், அது, குடலில் அதிக வாயு உற்பத்திக்கு காரஆக மாறும். எனவே, மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். உடற்பயிற்சிகள் செய்வதால், வயிற்று தசைகள் மற்றும் செரிமான உறுப்புகள் நன்றாக செயல்படும்.


காலை உணவை தவிர்ப்பது, நீண்ட நேரம் பசியுடன் இருப்பது, வறுத்த பொருட்களை சாப்பிடுவது, பழைய உணவை உண்பது, உணவை விரைவாக உண்ணுவது என நமது உணவு பழக்க வழங்கங்கள் (Eating Habit) உட்பட பல பிரச்சனைகளால் வாயுத்தொல்லை ஏற்படுகிறது.


வாயு பிரச்சனையில் இருந்து விடுபட கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறுமிளகு மற்றும் இஞ்சியை உட்கொள்வது வாயுத் தொல்லையில் இருந்து உங்களை விடுவிக்கும். இஞ்சி மற்றும் எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். எலுமிச்சை கலந்த நீரை அவ்வப்போது குடித்து வந்தால் வாயுவிலிருந்து நிவாரணம் அளிக்கும்.


READ ALSO |  கொரோனா வைரசின் புதிய பிறழ்வு ஆபத்தானது! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR