WHO: கொரோனா வைரசின் புதிய பிறழ்வு ஆபத்தானது! ஆனால் பயணத்தடை அவசியமில்லை

கொரொனா வைரஸின் மிகவும் பிறழ்ந்த புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு, 6 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களை இங்கிலாந்து தடை செய்தது. இதையடுத்து WHO சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 28, 2021, 07:28 AM IST
  • கொரோனாவின் புதிய பிறழ்வு ஆபத்தானது
  • மீண்டும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்
  • தற்போதைக்கு பயணத்தடை தேவையில்லை
WHO: கொரோனா வைரசின் புதிய பிறழ்வு ஆபத்தானது!  ஆனால் பயணத்தடை அவசியமில்லை title=

கோவிட் தொற்று தொடர்பான கவலைகளை அதிகரிக்கச் செய்யும் தகவல்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன. கொரொனா வைரஸின் மிகவும் பிறழ்ந்த புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே, நிலைமையை பற்றி கலந்தாலோசிப்பதற்காக, உலக சுகாதார அமைப்பு (World Health Organization) சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

வெள்ளிக்கிழமை (நவம்பர், 27, 2021) நடைபெற்ற WHO கூட்டத்தில் புதிய மாறுபட்ட கொரோனா வைரஸ் மீது, தற்போதைய தடுப்பூசிகள் (Covid Vaccine) மற்றும் சிகிச்சைகள் மீதான தாக்கம் பற்றி விவாதிக்கப்பட்டது.

நிபுணர்களிடம் கலந்தாலோசித்த பிறகு B.1.1.529 என்ற கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு கவலை தருவதாக WHO அறிவித்துள்ளது "COVID-19 தொற்றுநோய்களில் தீங்கு விளைவிக்கும் மாற்றம்" ("variant of concern") என்று கூறுகிறது. பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எதிராக நாடுகளை எச்சரிக்க்கும் உலக சுகாதார அமைப்பு, .ஓமிக்ரான் (Omicron) மாறுபாடு பற்றிய முழுமையான தகவல்கள் தெரிவதற்கு முன்னதாக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அவசியம் இல்லை என்று அறிவுறுத்துகிறது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட B.1.1.529 மாறுபாட்டை SARS-CoV-2 "கவலையின் மாறுபாடு" என்று உலக சுகாதார அமைப்பு (World Health Organization) வெள்ளிக்கிழமை வகைப்படுத்தியுள்ளது, இது மற்றவற்றை விட விரைவாக பரவக்கூடிய கொரோனாவின் வடிவம் என்று கூறியுள்ளது. 

READ ALSO | Sputnik light கோவிட் தடுப்பூசி டிசம்பரில் இந்தியாவில் அறிமுகம்!

இது மீண்டும் உலக அளவில் பாதிப்பை தொடங்கிவிடும்  அபாயம் இருப்பதாகவும், ஆரம்ப சான்றுகள் தெரிவிக்கின்றன, தரவுகளை மதிப்பாய்வு செய்த சுயாதீன நிபுணர்களின் கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை வாரங்களில் தென்னாப்பிரிக்காவில் நோய்த்தொற்றுகள் திடீரென உயர்ந்துள்ளன. "இந்த மாறுபாடு அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் சில கவலைகளை ஏற்படுத்துகின்றன.  ​​இந்த மாறுபாட்டின் மூலம் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஆரம்ப சான்றுகள் தெரிவிக்கின்றன".

தற்போதைய பிசிஆர் சோதனைகள், பிறழ்ந்துவரும் கொரோனாவை வெற்றிகரமாகக் கண்டறிவதாக அது கூறியது. தென்னாப்பிரிக்காவின் சோவெட்டோவில், ஒரு புதிய கொரோனா வைரஸ் நோய் (COVID-19) கண்டறியப்பட்டதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானங்களுக்கு பிரிட்டிஷ் தடை விதித்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு, உலக சுகாதார அமைப்பு சிறப்பு கூட்டத்தைக் கூட்டியது.

READ ALSO | குழந்தைகளுக்கு அதிக ஆபத்தான உணவுகள்!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய மாறுபாடு தொடர்பாக பீதி எழுந்துவிடக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் எச்சரிக்கையுடன் பதிலளித்தனர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகியவை எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகின்றன, ஏனெனில் இந்த கொரோனா பிறழ்வுக்கு, தடுப்பூசி-எதிர்ப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகள் முயன்றுவருகின்றனர்.

"இந்த கட்டத்தில், பயண நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டாம் என நாடுகளை எச்சரிக்கிறோம்" என்று WHO செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர் தெரிவித்தார். "பயண நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்போது நாடுகள் தொடர்ந்து ஆபத்து அடிப்படையிலான மற்றும் அறிவியல் அணுகுமுறையைப் பயன்படுத்த வேண்டும் என்று WHO பரிந்துரைக்கிறது."

மாறுபாட்டின் பரவும் தன்மை மற்றும் அதற்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளின் செயல்திறனைத் தீர்மானிக்க பல வாரங்கள் ஆகும், என்று WHO செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர் கூறினார், மாறுபாட்டின் 100 வரிசைகள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும், பெரிய அளவிலான கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும், காற்றோட்டமாக இருக்கும் அறைகளில் இருக்க வேண்டும், கை சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்றும் லிண்ட்மேயர் கூறினார்.

ALSO READ | கிட்னி பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா? 5 டிப்ஸை கட்டாயம் பின்பற்றுங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News