இஞ்சி  சமையலறையில்  வழக்கமாக பயன்படுத்தப்படும் பொருள்.   இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவதால் பல நோய்கள் குணமாகும். இஞ்சி ஒன்றல்ல பல  ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்கின்றனர் நிபுணர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஞ்சி: இஞ்சி யாருடைய சமையலறையிலும் எளிதில் கிடைக்கும், எனவே நீங்கள் இதை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும், உண்மையில் இது ஒன்றல்ல பல பெரிய நன்மைகளைக் கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். எனினும் இதை  அளவிற்கு அதிகமாகவும் உபயோகிக்கக் கூடாது


இஞ்சியை சரியான அளவில் உட்கொள்ளும் போது, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.  நாள் ஒன்றுக்கு 4 கிராம் இஞ்சியை சாப்பிட்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவும். எனினும், அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு அல்லது வயிற்றுப் பிரச்சினைகள்  ஏற்படலாம்.


மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்


இஞ்சியில் அடங்கியுள்ள பிற ஆரோக்கிய நன்மைகள்


ஒற்றைத் தலைவலி அதிகம் உள்ளவர்களும் இதனை உட்கொள்ளலாம். குறிப்பாக பச்சையாக இஞ்சியை உட்கொள்வதன் மூலம், அதிக பலனை பெறுவீர்கள்.


கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதிலும் இஞ்சி மிகவும் நன்மை பயக்கும். அதாவது மாரடைப்பு அபாயமும் இதன் மூலம் குறையும். தேநீருடன் கூட பயன்படுத்தலாம். காய்கறிகளை சமைக்கும் போதும் பயன்படுத்தலாம்.


பச்சை இஞ்சி வயிற்றுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இஞ்சி செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது. வயிற்று வலி, வயிற்று பிடிப்பு போன பிரச்சனைகள் உள்ளவர்கள், பச்சையாக இஞ்சியை சாப்பிட, வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு  பெரிய நிவாரணமாக அமையும். 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் பரிந்துரையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)


மேலும் படிக்க | இதய ஆரோக்கியம்: மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ‘சிறந்த’ உணவுகள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR