இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்
இஞ்சியின் உள் பகுதியின் இருப்பதை விட, அதன் தோலில் இரண்டு மடங்கு அதிக பாலிபீனால்கள் இருப்பதால், அவை உங்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.
பெரும்பாலானோர் இஞ்சியை அதன் தோலை நீக்கியே பயன்படுத்துகின்றனர். உணவில் சேர்க்கும் போது இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு உள்ளது. அதிசய மூலிகை எனக் கூறப்படும் இஞ்சியின் பலனை முழுமையாக பெற தோலை நீக்க கூடாது என ஹார்வர்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இஞ்சித் தோலை நீக்காமல் பயன்படுத்தினால் மிகவும் நல்லது என்கின்றனர். இஞ்சியின் உள் பகுதியின் இருப்பதை விட, அதன் தோலில் இரண்டு மடங்கு அதிக பாலிஃபீனால்கள் இருப்பதால் அவை உங்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.
தேநீர் முதல் பல உணவுகளில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியை சேர்ப்பதால் தேநீருக்கும், உணவுக்கும் சுவையை மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் பெரும் நன்மை பயக்கும். அதனால், இஞ்சியை நன்றாக கழுவி பின்னர், தோலுடன் பயன்படுத்தும் பழக்கத்தை பின்பற்றவும். தேநீரில் இஞ்சியை தோலை நீக்காமல் சேர்க்கவும். இதானால், இஞ்சியின் முழு பயனை அடையலாம்.
மேலும் படிக்க | இஞ்சி - சுக்கு: உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பது எது
இஞ்சியை உட்கொள்வது மாதவிடாய் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. இதனுடன், கீல்வாத நோயாளிகளுக்கு உள்ள வீக்கத்தைக் குறைப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சி சாப்பிடுவதால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு நீண்ட நேரம் பசி எடுக்காது. அதன் காரணமாக எடை இழப்பிற்கு பெரிதும் உதவுகிறது.
இஞ்சியில் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் வீக்கம் எதிர்ப்பு கலவைகள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR