புதுடெல்லி: இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, 24 மணி நேரத்தில் பதிவான புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நான்கு மாதங்களில் முதல் முறையாக 30,000 க்கும் குறைவாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, திங்கட்கிழமைன்று 29,163 புதிய கொரோனா பாதிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவின் கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை 88.74 லட்சமாக உயர்ந்துள்ளது.
COVID-19 நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 82,90,370 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை 15 அன்று மட்டும்தான் 29,429 வழக்குகள் பதிவாகியிருந்தன. இதுதான் கடைசியாக 30,000 க்கும் குறைவாக கொரோனா பாதிப்பு குறைவாக பதிவான தினம். அதன்பிறகு நேற்று தான், 29,163 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. இது சற்று ஆறுதல் கொடுக்கும் விஷயம்.


ஆபத்தான கொரோனா வைரஸ் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 449 ஆக பதிவாகி, மொத்த கோவிட்-19 பலி எண்ணிக்கை 1,30,519 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கோவிட்-19 பிடியில் சிக்கி, சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது, இப்போது இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,53,401.


நாட்டில் கொரோனா பாதித்து, அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 82,90,370 ஆக அதிகரித்துள்ளது, மேலும் தேசிய மீட்பு விகிதம் இப்போது 93.42 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் இப்போது 1.47 சதவீதமாக உள்ளது. 


இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு செப்டம்பர் 16 அன்று 50 லட்சம், செப்டம்பர் 28 அன்று 60 லட்சம், அக்டோபர் 11 அன்று 70 லட்சம் மற்றும் அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தை தாண்டியது.



டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 99 இறப்புகளும் 3,797 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் டெல்லியின் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு சராசரியாக 7,000 ஆக இருந்து பாதியாக குறைந்திருந்தாலும், கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 30,000 என்ற அளவில் இருக்கிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.


உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை: 54,451,804; மொத்த இறப்பு எண்ணிக்கை: 1,318,033; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை: 35,018,852


ஆறு நாட்களில் ஒரு மில்லியன் பேருக்கு அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 11 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.  


செப்டம்பர் மாதத்திலிருந்து தென் கொரியாவிலும் கொரோனா பாதிப்பு தினசரி அடிப்படையில் அதிகரித்து வருகிறது.
 
ஏப்ரலுக்கு பிறகு கொரோனா பாதிப்பு முதன்முறையாக பதிவு செய்திருக்கும் தெற்கு  ஆஸ்திரேலியா மாகாணம் கட்டுப்பாடுகளை அறிவிக்கிறது


இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்த அரசியல்வாதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து, அவர் தற்போது தன்னை தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். 



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR