கோவிட்-19 நோயை குணமாக்கும் மாத்திரைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதுதான் கொரோனா வைரஸால் ஏற்படும் கோவிட் நோய்க்கு எதிரான முதல் வாய்வழி மாத்திரை என்பது குறிப்பிடத்தக்கது.  ‘மோல்னுபிரவீர்’ (Molnupiravir) என்ற இந்த மாத்திரையை, உலகிலேயே முதல்முதலாக இங்கிலாந்து அங்கீகரித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Molnupiravir மருந்தின் மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்காலப் பகுப்பாய்வில், லேசான அல்லது மிதமான கோவிட்-19 நோயாளிகளுக்கு மோல்னுபிராவிர் மாத்திரையைக் கொடுப்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும், நோயால் மரணிப்பதற்கான அபாயத்தை சுமார் 50% குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.


கோவிட்-19க்கு எதிரான உலகின் முதல் வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்தான, மெர்க்கின் மோல்னுபிராவிர் (Merck's molnupiravir) மாத்திரையை அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது. மோல்னுபிராவிர் (Molnupiravir) மாத்திரையின் பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மிகவும் கூர்ந்து அவதானித்து, கடுமையான மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டின், மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பு (Medicines and Healthcare products Regulatory Agency) மோல்னுபிராவிருக்கு ஒப்புதல் அளித்தது.


Also Read | நோய் எதிர்ப்பு சக்தியை தவிடு பொடியாக்கும் ஆபத்தான பழக்கங்கள்


ரிட்ஜ்பேக் பயோதெரபியூட்டிக்ஸ் (Ridgeback Biotherapeutics) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட மோல்னுபிராவிர், லேசான அல்லது மிதமான கோவிட்-19 நோய்த்தொற்று உள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் அல்லது இறப்பு ஏற்படும் அபாயத்தை பாதியாகக் குறைக்கும். வாய்வழி மாத்திரை உடலுக்குள் வைரஸின் பாதிப்பை தடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறது என்று அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.


மோல்னுபிராவிர் (Molnupiravir) மாத்திரை, இங்கிலாந்தில் LAGEVRIO என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US Food and Drug Administration (FDA)) மற்றும் ஐரோப்பிய மருந்துகள் முகமை ஆகியவை மருந்துகளின் அவசரகால அங்கீகாரம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.


இங்கிலாந்து நாட்டில் கிடைத்த ஒப்புதலுடன், கோவிட்-19க்கான முதல் வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்தாக மோல்னுபிரவீர் மாறியுள்ளது. மோல்னுபிராவிரின் 3 ஆம் கட்ட ஆய்வு நேர்மறையான முடிவுகளைக் காட்டுகிறது. 775 பேர் பங்கு கொண்ட மூன்றாம் கட்ட ஆய்வின் இடைக்கால பகுப்பாய்வின் நேர்மறையான முடிவுகளின் அடிப்படையில் இங்கிலாந்தில் மருந்தின் அவசர அங்கீகாரம் கிடைத்துள்ளது. 


Read Also | உங்கள் அடுப்பங்கரையில் இருக்கும் இயற்கையான வயகரா


இந்த ஆய்வின் முடிவுகளின்படி, 29 நாட்களுக்குள் மோல்னுபிராவிர் சிகிச்சை பெற்ற 775 நோயாளிகளில் 7.3 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகளில், 14.1 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், 29 நாட்களில் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.


நோய் அறிகுறி தோன்றிய நேரம் அல்லது அடிப்படை ஆபத்து காரணி எதுவாக இருந்தாலும், கோவிட்-19 வகைகளான காமா, டெல்டா மற்றும் மு (Gamma, Delta, and Mu, ) ஆகியவற்றுக்கு எதிராக மோல்னுபிராவிர் ஆக்கப்பூர்வமான செயல்திறனை வெளிப்படுத்தியதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.


கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மோல்னுபிராவிரின் பங்கு குறித்து நம்பிக்கை அதிகரித்துள்ளது.


"COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட கூடுதல் கருவிகள் மற்றும் சிகிச்சைகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன, மரணத்திற்கு முக்கிய காரணமாக மாறியுள்ள கோவிட், சமூகத்தை ஆழமாகப் பாதிக்கிறது. உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளை பாதிக்கிறது. தற்போது, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக மோல்னுபிராவிர் ஒரு முக்கியமான மருந்தாக மாறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்று மெர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான ராபர்ட் எம். டேவிஸ் கூறினார்.


Also Read | ஆஸ்துமாவா? கவலையில்லாமல் தீபாவளியை கொண்டாட Tips


மருந்தின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த Ridgeback Biotherapeutics இன் தலைமைச் செயல் அதிகாரி வெண்டி ஹோல்மன் "கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல திரிபுகளாக உருவெடுத்து பரவலாகப் பரவி வருவதால், தற்போது கிடைக்கக்கூடிய சிகிச்சை, வீட்டிலேயே எடுக்கப்படும் வைரஸ் தடுப்பு சிகிச்சைகளாகவும், மருத்துமனைக்கு செல்லத் தேவையில்லாததாகவும் மாறுவது மிகவும் அவசியம்" என்று கூறுகிறார்.


2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கான வாய்வழி மாத்திரைகளின் உற்பத்தி 10 மில்லியன் என்ற அளவில் இருக்க வேண்டும் என Merck இலக்காகக் கொண்டுள்ளது, 2022ம் ஆண்டில் அதிக அளவிலான மாத்திரைகள் தயாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


கொரோனாவுக்கான மாத்திரை வந்துவிட்டால், வழக்கமான காய்ச்சலைப் போலவே, ஆரம்பத்திலேயே மாத்திரை எடுத்து குணமாகிவிடலாம். அப்போது, கொரோனா என்ற வைரஸ், கொடுங்காலனாக தோற்றமளிக்காது.


READ ALSO | ஒரு பழத்தின் விலை இவ்வளவா? 50 பவுன் நகையே வாங்கிடலாமே?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR