நியூயார்க் : சிகரெட் அட்டையில் புற்றுநோய் ஏற்பட்டது போன்ற பெரிய அளவிலான கிராபிக் படங்கள் போடுவதால், புகைப்பிடிப்பது குறையும் என அமெரிக்காவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் கடந்த 50 வருடங்களில் 6,52,000 மக்கள் சிகரெட் பிடித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு இறந்துள்ளனர், 92,000 குழந்தைகளுக்கும் மேல் எடை குறைந்த அள்வில் பிறந்துள்ளது.மேலும் 1,45,000 குழந்தைகள் குறைபிரசவத்தில் பிறந்துள்ளது எனவும், 1,000 பேர் வரை திடீர் மரணத்தை சந்தித்துள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.


எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும். புகை பழக்கம் உள்ளவர்களுக்கு உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.


எனவே, புகைத்தலின் தீமையை உணருங்கள் அதை விட்டு விடுவதாக உறுதியாக முடிவு செய்யுங்கள்.