Green Chilli Benefits: தினமும் பச்சை மிளகாய் சாப்பிடுவீங்களா? இந்த மாற்றம்லாம் உங்க உடம்புல நடக்கும்
Green Chilli Amazing Health Benefits: உணவின் சுவையை அதிகரிக்கும் பச்சை மிளகாய், உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.
Green Chilli Health Benefits: பச்சை மிளகாய் உணவின் சுவையை மேம்படுத்த பயன்படுத்தப்படும் பொருளாகும். குறிப்பாக இந்திய உணவில் மிளகாய் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்திய மக்கள் அதிகம் காரமான உணவை சாப்பிட விருமப்புகிறார்கள். நீங்கள் பச்சை மிளகாயை விரும்பி உண்பவராக இருந்தால், பச்சை மிளகாயை (Green Chilli) சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பச்சை மிளகாய் (Green Chilli Benefits) உணவின் சுவையை அதிகரிப்பதுடன், ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. ஏனெனில் இந்த பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, பி6, சி, இரும்பு சத்து, பொட்டாசியம், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட், பீட்டா கரோட்டின், கிரிப்டோக்சாண்டின், லுடீன் ஜியாக்சாந்தின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்க உதவுகிறது. எனவே இந்த கட்டுரையில் பச்சை மிளகாயை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் (Health Benefits Of Green Chilli) நன்மைகளை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பச்சை மிளகாயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம் | Green Chilli Health Benefits:
1. கண்களுக்கு நல்லது: பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது பார்வையை மேம்படுத்தவும், கண்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
2. செரிமானத்தை மேம்படுத்த உதவும்: பச்சை மிளகாய் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் நல்ல மூலமாகும். பச்சை மிளகாயில் உணவு நார்ச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், இவை செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
3. உடல் எடை குறைக்க உதவும்: முன்பு கூறியது போல் பச்சை மிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருக்கிறது, மேலும் இதில் கலோரிகளுக்கு ஜீரோ என்பதால், இது உடல் எடையைக் (Weight Loss Tips) குறைக்க பெரிய அளவில் உதவும்.
மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!
4. இதயத்திற்கு நல்லது: இதயம் எப்போதுமே ஆரோக்கியமாக (Health Tips) இருக்க உணவில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு பச்சை மிளகாய் சிறந்தது. எனவே தினமும் பச்சை மிளகாய் சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
5. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை: நீரிழிவு நோயாளிகளுக்கு (Diabetes) பல உணவுகள் சாப்பிட தடை செய்யப்படுகிறது. ஆனால் மாறாக பச்சை மிளகாயை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் பச்சை மிளகாயில் கேப்சைசின் என்கிற கலவை உள்ளதால், இவை நீரிழிவை எதிர்த்து போராட உதவும்.
6. சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுப்பட உதவும்: நீங்கள் சைனஸ் பிரச்சனையை எதிர்கொள்கிறீர்கள் என்றால் பச்சை மிளகாய் இதற்கு நிவாரணம் அளிக்க உதவும். ஏனெனில் பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனினும் அதிகமாக மிளகாயை உட்கொள்வது டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். அதுமட்டுமின்றி வயிற்றில் எரிச்சல், வீக்கம், தொண்டை எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ