நரை முடி பிரச்சனைகளை என்பது வயதானவர்கள் பிரச்சனையாக இருந்த காலம் மலை ஏறி விட்டது. இப்போது பல இளைஞர்கள் இந்த பிரச்சனையினால் அவதுப்படுகின்றனர். இளமையில்  நரை முடி  ஏற்படுவதற்குய் டென்ஷனுக்கு முக்கிய காரணம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும் ஆளி விதைகளால் நரை முடியை மீண்டும் கருமையாக்கலாம். இந்த விதைகள் ஆரோக்கியத்திற்கு வரமாக கருதப்படுகின்றன, ஏனெனில் அத்தியாவசிய மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. மேலும் இதில் புரதம், ஒமேகா-3 அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. 


தலை முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும், வலுவாகவும் மாற்ற ஆளி விதையிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் வெள்ளை முடி மீண்டும் கருமையாக மாறும்.


ஆளி விதைகளை பயன்படுத்தும் முறை


ஆளி விதை முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆளிவிதையைகொண்டு தயாரிக்கும் ஜெல்லை எப்படி தயாரிப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.  இதை பயன்படுத்தினால் போது. உங்கள் தலைமுடிக்கு ஒருபோதும் விலையுயர்ந்த முடி தயாரிப்பு தேவையில்லை. ஹேர் ஜெல் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.


மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன


ஆளிவிதை ஜெல் செய்முறை


தேவையான பொருட்கள்:


1 கப் ஆளி விதைகள்
3-4 கப் தண்ணீர்
3-4 சொட்டு எசன்ஷியல் எண்ணெய்
1 தேக்கரண்டி ஆலிவ் / தேங்காய் / வைட்டமின் ஈ எண்ணெய்



ஹேர் ஜெல் தயாரிப்பது எப்படி?


1. ஆளி விதைகளை தண்ணீரில் போட்டு அதிக தீயில் கொதிக்க வைக்கவும்.


2. நன்றாக கொதித்ததும் கேஸை அணைக்கவும்.


3. அதன் பிறகு இந்த பேஸ்ட்டை ஒரு மஸ்லின் துணியில் போடவும்.


4. பின்னர் அதை ஒரு சுத்தமான கண்ணாடி கொள்கலனில் நன்றாக வடிகட்டவும்.


முடியில் தடவும் விதம் 


முதலில், ஒரு கிண்ணத்தை எடுத்து, உங்கள் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப 1 அல்லது 2 தேக்கரண்டி ஜெல் சேர்க்கவும்.


இதற்குப் பிறகு, ஆலிவ், வைட்டமின் ஈ அல்லது தேங்காய் எண்ணெயையும் அதில் கலக்கலாம்.


இப்போது உங்கள் தலைமுடியை நான்கு பகுதிகளாகப் பிரித்து, முடியின் மீது இந்த ஜெல்லை நன்கு தடவவும்.


இந்த ஜெல்லை 10 முதல் 15 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம்.


அதில் நல்லெண்ணெய் சேர்த்தால், 20-25 நாட்களுக்கு சேமித்து வைக்கலாம்.


ஆளிவிதைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஹேர் ஜெல்லின் நன்மைகள்


முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்கிறது.


இது முடியின் வேர்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.


இந்த ஜெல் முடி வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும்.


இது வெள்ளை முடி பிரச்சனையை போக்க உதவுகிறது.


முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் இருக்க, அதை ஹேர் கண்டிஷனராகப் பயன்படுத்துங்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க |நிம்மதியான தூக்கம் வேண்டுமா; டின்னரில் ‘இவற்றை’ சேர்த்துக் கொள்ளுங்கள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR