நாட்டில் கொரோனா பரவல் நாளுக்குநாள் மிகவும் அதிகமாக இருக்கிறது.  கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா (Coronavirus) பரவலின் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள்,விளையாட்டு அரங்குகள், வணிக வளாக கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் உட்பட இடங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.


குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள ஒரு மசூதி (Mosque) கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மசூதியில் 50 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 


ALSO READ | முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோன தொற்று உறுதி!


”ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை வசதி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மசூதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். ரமலான் மாதத்தில் இதை விட சிறப்பான சேவை வேறு எதுவும் இருக்க முடியாது” என மசூதியின் பொறுப்பாளர் தெரிவித்தார்.


குஜராத்தில் நேற்று ஒரேநாளில் 11,403 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, 117 பேர் உயிரிழந்துள்ளனர்.  


Also Read | Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்


கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்கள வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு (Central Government)  சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.


பிரதான் மந்திரி கரிப் கல்யான் (Prime Minister Karib Kalyan) எனப்படும் இந்த காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இது கொரோனா பணிகளில் ஈடுபட்டு இருக்கும் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களது குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பாகவும் இருக்கும்.


Also Read | சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR