முடி கொட்டுதல் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஒரு பிரச்சனையாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பது நமக்கு தெரிவதில்லை. முடி கொட்டும் பிரச்சனையால் நமது இயற்கை அழகும், முடி வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. முடியைத் தவறாக பராமரிப்பதன் விளைவாகவே இந்த நிலை ஏற்படுகிறது. ஆகவே இங்கு கெமிக்கல் பயன்பாடு இல்லாமல், முடி கொட்டுவதை அல்லது வெடிப்பதை குறைப்பதற்கான சிறந்த வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பயன்பெறுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக ஆரஞ்சு சாப்பிடுவதற்கு மட்டும் பயன்படுவது மட்டுமின்றி சருமம் மற்றும் கூந்தலுக்கும் பயன்படுகிறது. ஆம்., ஆரஞ்சு நம் முடிக்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? ஆரஞ்சு உங்கள் தலைமுடிக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க |  Fourth wave of Covid: அலட்சியப்படுத்த வேண்டாம், இதுதான் புதிய அறிகுறிகள்


ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். உங்கள் உடலில் வைட்டமின்-சி தேவைப்பட்டால், உடனடியாக தினமும் 2-3 ஆரஞ்சு சாப்பிடுங்கள். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்-சி அதிகம் உள்ளது, இது முடி உச்சந்தலையின் பிஎச் ஐ அதிகரிக்க உதவுகிறது.


அதேபோல் "ஆரஞ்சு எண்ணெய்" முடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆரஞ்சு எண்ணெய் உயிரற்ற கூந்தலுக்கு மிகவும் நல்லது. இது உச்சந்தலையில் இருக்கும் முடியை வளரச் செய்வதுடன் முடியை வலுப்படுத்துகிறது. இது தவிர, நீங்கள் ஆரஞ்சு ஹேர் மாஸ்கையும் பயன்படுத்தலாம். இந்த ஹேர் மாஸ்க் முடிக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. இது உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.


ஆரஞ்சு ஹேர் கண்டிஷனர் மூலமாகவும் முடியை வலிமையாக்கலாம். உங்கள் தலைமுடி மிகவும் வறண்டு, உயிரற்றதாக இருந்தால், முடியை சீரமைக்க ஆரஞ்சு கண்டிஷனரைப் பயன்படுத்தலாம்.


ஆரஞ்சு முடி பொடுகு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதோடு, முடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது. ஆகவே நீங்கள் எந்த முறையுலும் ஆரஞ்சை முடியில்  பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள்.


மேலும் படிக்க |  சிறுநீரக கல்லை கரைக்கும் 3 ஜூஸ்கள்; தினமும் அருந்திட தீர்வு நிச்சயம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR