இந்த காலத்தில் பெரும்பாலான பெண்கள் முடி உதிரும் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இன்றைய வாழ்க்கை முறை இதற்கான ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அனைத்து பெண்களுக்கும் கேச பராமரிப்பு ஒரு முக்கியமான விஷயமாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலை முடி-யை பராமரிக்க அவர்கள் பல வித எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் பல்வேறு வகையான சிகிச்சைகள் செய்கிறார்கள். எனினும், முடி உதிரும் பிரச்சனையை பெரும்பான்மையானோரால் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஆகையால் முடி உதிர்வதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். 


இதை தெரிந்துகொண்டால், அதற்கு ஏற்றபடி பழக்கவழக்கங்களை மாற்றி முடி உதிர்வதை கட்டுப்படுத்தலாம். இந்த பிரச்சனைக்கான மூல காரணங்கள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.


தூக்கமின்மை:
7 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் உங்கள் எடையை மோசமாக பாதிக்கும். அதோடு, முடி உதிர்தலுக்கும் வழிவகுக்கும். ஆகையால், 7 மணி நேரம் தூங்குவதை கண்டிப்பாக கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.


வெந்நீர்:
உங்கள் தலைமுடியை வெந்நீர் கொண்டு கழுவினால், முடி உதிர்தல் தொடங்கும், பொடுகுத் தொல்லையும் உண்டாகும். ஆகையால் வெதுவெதுப்பான நீர் கொண்டே கூந்தலை கழுவவும்.


மேலும் படிக்க | பொடுகு பிரச்சனை உடனே நீங்க இந்த இரண்டு பொருட்கள் போதும் 


ஜங்க் ஃபுட்:


இரும்புச்சத்து, வைட்டமின்-ஏ, சி மற்றும் துத்தநாகம் ஆகியவை முடி உதிர்தலுக்கு காரணமான கூறுகளாகும். உங்களுக்கு முடி உதிர்வு இருந்தால், முதலில் நீங்கள் இந்த கூறுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறீர்களா என்பதை ஆராயவும். இது தவிர அடிக்கடி ஜங்க் ஃபுட் உண்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.


ப்ளோ ட்ரையர்:


ப்ளோ ட்ரையரின் பயன்பாடு காரணமாக உருவாகும் வெப்பம் உங்கள் தலைமுடியை சேதப்படுத்துகிறது மற்றும் அது முடி உடைவதற்கு வழிவகுக்கிறது. நீங்கள் உங்கள் தலைமுடியை விரைவாக உலர்த்த வேண்டியிருந்தாலும், முடி குறைந்தது 60-70 சதவிகிதம் உலரும் வரை காத்திருக்கவும், அதன் பிறகு உங்கள் தலைமுடியை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து ப்ளோ செய்யவும்.


மன அழுத்தம்:


நீங்கள் சிறிய விஷயத்துக்கெல்லாம் அழுத்தம் கொண்டால், அந்த மன அழுத்தமும் முடி உதிர்வுக்கு காரணமாகும். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உங்கள் உடல் சரியாக வேலை செய்யாது, முடிக்கு தேவையான சத்து கிடைக்காமல் கேசம் பலவீனமாகிவிடும். இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.


அதிகமாக ஷாம்பு போடுவது:


தினமும் ஷாம்பு போட்டு குளித்தால் முடி சுத்தமாக இருக்கும் என்று பலர் நினைக்கலாம். ஆனால், இதனால் முடி உதிரும் அபாயம் அதிகமாகிறது. ஷாம்பூவில் உள்ள சல்பேட் போன்ற இரசாயனங்கள் முடியை பலவீனமாக்குகின்றன. இதை தினமும் பயன்படுத்துவதால் முடி உதிர்வது அதிகமாகிறது.


ஹேர் டூல்ஸ்:


மீண்டும் மீண்டும் ஸ்டைலிங் செய்வதால் முடி உடைந்து போகிறது. ஹேர் ஸ்டைலிங் கருவிகளில் இருந்து வெளியாகும் வெப்பம் முடியை வலுவிழக்கச் செய்து, முடியின் இயற்கையான அமைப்பைக் கெடுக்கிறது. இதன் காரணமாக முடி பலவீனமாகி உதிர்கிறது. 


மேலும் படிக்க | பகீர் தகவல்! அளவுக்கு அதிகமான ‘ஆண்டிபாயாடிக்' உங்கள் வாழ்க்கையை முடக்கி விடலாம்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR