Hair Fall Treatment In Tamil: தற்போதைய காலக்கட்டதில் முடி பிரச்சினை (Hair Problem) மிகவும் பொதுவான விஷயம் ஆகும், அந்தவகையில் மழைக்காலங்களில் (Monsoon) முடி பிரச்சினை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும். வானிலையில் ஈரப்பதம் இருப்பதால், உச்சந்தலையில் வியர்வை, பொடுகு போன்றவற்றை ஏற்படக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிக ஈரப்பதத்துடன் கூடுதலாக, இந்த நாட்களில் பூஞ்சை தொற்று (Fungal Infection) அதிகம். பெரும்பாலான பூஞ்சை தொற்று அபாயகரமானவை அல்ல. ஆனால் அது முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம்.


ALSO READ | Hair Fall Tips: முடி உதிர்வதைத் தடுக்க, இவற்றிலிருந்து ஒதுங்கி இருங்கள்


Monsoon Hair Problems In Tamil
* முடி வேர்களை பலவீனப்படுத்துவதுடன், முடி உதிர்தலை (Hair Fall) அதிகரிக்கும்.
* பாக்டீரியா தொற்று (Bacterial Infection) ஏற்படும் அபாயமும் உள்ளது.
* Acidic Rainfall கூந்தலின் ஊட்டச்சத்துக்களை சேதப்படுத்தும்.
* கூந்தலில் பொடுகு இருப்பது அல்லது அதிகரித்தல்.


மழைக்காலத்தில் முடி ஆரோக்கியத்திற்கு என்ன செய்ய வேண்டும்
1. காற்றில் ஈரப்பதம் மிகுந்த இருக்கும் காலம் என்பதால் முடிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கிடக்கும் ஆகவே கூந்தலுக்கு முடிந்த வரை தேவையில்லாத வேதிப்பொருட்கள் கலந்த அழகுசாதனப் பொருட்களை தவிருங்கள். 
2. கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது புரதச்சத்து தான். உணவில் புரோட்டின் மிகுந்த முட்டை, மீன், தானியங்கள், டிரைப்ரூட்ஸ், கேரட், கீரைகள், பால் என தேர்வு செய்து உண்ணுங்கள். வலுவான கூந்தலுக்கு புரதச்சத்து இன்றியமையாதது.
3. தலைமுடியினை நன்கு அலசிக்குளிக்கவும். குளிப்பதற்க்கு மிதமான ஷாம்புகளை உபயோகிக்கவும்.
4. கூந்தலுக்கான போஷாக்கு அளிக்கும் வகையில் கண்டிஷனரை தவறாமல் பயன்படுத்துங்கள். இயன்றவரை இயற்கை பொருட்கள் உள்ள கண்டிஷனரை  பயன்படுத்துங்கள். 


ALSO READ | முடி உதிர்தலைத் தடுக்க 5 வாழ்க்கை முறை மாற்றங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR