பிரிட்ஜ் தண்ணீர் குடிப்பதால் இதய துடிப்பு குறையும்; நிபுணர்கள் எச்சரிக்கை..!!
கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்ட நிலையில், பெரும்பாலான மக்கள் பிரிட்ஜில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை குடிக்க ஆரம்பித்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கிய நிலையில், பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீரையும் குடிக்க ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், குளிர்ந்த நீர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். உங்கள் வீட்டுப் பெரியவர்களும் இதே அறிவுரையை தொடர்ந்து கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.
பிரிட்ஜில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை குடிப்பதற்குப் பதிலாக, சாதாரண தண்ணீரைக் குடிக்க வேண்டும். அப்படி குளிர்ந்த் நீர் தான் வேண்டும் என்றால் மண் பானை தண்ணீரைக் குடிப்பது நல்லது. கோடையில் குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை குடிப்பது நோய் வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. குளிர்ந்த நீர் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏன் நல்லதல்ல என்பதற்கான காரணங்களை அறிந்து கொள்வோம்.
செரிமான பிரச்சனை
குளிர்ந்த நீரை குடிப்பது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவும்போது, உங்கள் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு, தோல் தளர்வடைவதை நீங்கள் உணரக் கூடும். மறுபுறம், குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவினால், உங்கள் தோல் இறுக்கமடைகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், குளிர்ந்த நீரை குடித்தால் வயிற்றில் என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
மேலும் படிக்க | Raw Ginger: மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கும் ‘பச்சை’ இஞ்சி..!!
இதயத்துடிப்பைக் குறைக்கும்
இது தவிர, குளிர்ந்த நீர் உங்கள் இதயத் துடிப்பைக் குறைக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குளிர்ந்த நீரை குடிப்பது இதயத்திற்கும் நல்லதல்ல என தைவான் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே குளிர்ந்த நீர் குடிப்பதை முடிந்த அளவு குறைக்க முயற்சி செய்யுங்கள், இல்லையெனில் இதய பிரச்சனை உட்பட நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மலச்சிக்கல்
குளிர்ந்த நீரை குடிப்பதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. உணவு உண்ட பிறகு குளிர்ந்த நீரை அருந்தினால், அதன் பிறகு உணவு செரிப்பது கடினமாகிவிடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அ
தலைவலி
குளிர்ந்த நீரைக் குடித்த பிறகு பலருக்கு தலைவலி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஐஸ் கட்டியை வாயில் வைத்துக் கொள்ளும் போது, நம்மில் பலருக்கு நெற்றியில் வலி உணர்வு ஏற்படுவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். குளிர்ந்த நீரை குடிக்கும்போது, அந்த நீர் உணர்திறன் நரம்புகளை குளிர்விக்கும். இது தலைவலியை ஏற்படுத்துகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்; கட்டுப்படுத்துவது எப்படி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR