Hair Conditioner: கூந்தலை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் மாற்ற ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்தும் வழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால்,  வழுக்கை,  முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே மிகவும் கவனம் தேவை.  ஹேர் கண்டிஷனரை பயன்படுத்துவது பற்றி விரிவான தகவல்களை தோல் மருத்துவர் டாக்டர் ஆஞ்சல் பந்த் தெரிவித்துள்ளார். ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்துவதற்கான சரியான வழியை அவர் எடுத்துரைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹேர் கண்டிஷனரை பயன்படுத்துவதால் முடி உதிர்வு ஏற்படுமா?


ஹேர் கண்டிஷனர் முடி உதிர்வை ஏற்படுத்தாது என்று கூறிய தோல் மருத்துவர் ஆஞ்சல் பந்த் தெரிவித்தார். ஆனால், சரியான முறையில் ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் முடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.  நீண்ட மற்றும் அடர்த்தியான முடியைப் பெறவும் உதவுகிறது.  இருப்பினும், ஹேர் கண்டிஷனரை தவறாகப் பயன்படுத்துவதால் முடி வேர்கள் மிகவும் பாதிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் தோல் மருத்துவர்.


ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!


ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி என்ன, முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துவது எப்படி என்பதை விளக்கிய டாக்டர் ஆஞ்சல் பந்த், முடியின் நுனியில் மட்டுமே ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். உங்களுக்கு நீளமான முடி இருந்தால், முடியின் கீழ் முனையிலிருந்து நடுத்தர பகுதி வரை, அதாவது, முடியின் நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.


கூந்தலுக்கு கண்டிஷனரைப் பயன்படுத்திய பிறகு, பெரிய பற்கலை கொண்ட சீப்பு அல்லது விரல்களால் முடியை கோதி விடவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் தலைமுடியை நன்கு கழுவவும். ஹேர் கண்டிஷனரை உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே சமயம், எண்ணெய் பசை மற்றும் மெல்லிய கூந்தல் உள்ளவர்களும் ஹேர் கண்டிஷனரை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.


ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!


முடிக்கு ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்துவதன் நன்மைகள் பின்வருமாறு:


1. ஹேர் கண்டிஷனர் முடி உதிர்வதைத் தடுக்கிறது. ஏனெனில் இது முடியின் ஆழத்தில் சென்று கண்டிஷனிங் செய்கிறது.


2. ஹேர் கண்டிஷனர் முடியை மென்மையாக்குகிறது. இதனால் உங்கள் தலைமுடி உதிர்வது குறையும்.


3. ஹேர் கண்டிஷனர் முடியின் புரதம், எண்ணெய் பசை மற்றும் ஈரப்பதத்தை காக்கிறது. 


4. முடியை பளபளப்பாக வைக்கிறது.


5. ஹேர் கண்டிஷனரை சரியான முறையில் பயன்படுத்தினால், முடி உதிர்தல் பிரச்சனை முடிவுக்கு வரும்.


இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR