முட்டைகளை மறந்தும் கூட குளிர்சாதன பெட்டியில் வைக்காதீர்கள், அதனால் அதன் சுவை கெட்டுப்போவதுடன், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம். முட்டையை மொத்தமாக வாங்கி பிரிட்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. அது  ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடுன் தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, பிரிட்ஜில் வைக்கப்படும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுவதோடு, அது மிக சீக்கிரம் பாலைப்போல் திரிந்துவிடும் என பகீர் தகவல் அளித்துள்ளனர். 


முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் வைத்திருந்த பின், அதனை பயன்படுத்தும் போது அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும் நிலையில்,வெப்ப நிலை மாறுபாட்டினால், முட்டையின் ஓட்டில் உள்ள சிறுதுளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே சென்று விடும் என்கின்றனர்  ஆராய்ச்சியாளர்கள். எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து விட வேண்டும் அல்லது அறை வெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.


ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!


மேலும், குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை வைப்பதால், முட்டைகளின் இயற்கையான சுவை மாறுபட்டு விடும். சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் முட்டையை உட்கொள்ளும் நம், அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பராமரிக்கும் போது, முட்டையின் சத்துக்கள் அழிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், பிரிட்ஜில் முட்டையை வைத்து சாப்பிடுவதால், அதன ஆரோக்கிய நன்மைகள் எதுவும் கிடைக்காது என்பதோடு, அதனால் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு தான் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.



ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR