மனதில் குழப்பம் அதிகமாக இருக்கிறதா; சோடியம் குறைபாடு காரணமாக இருக்கலாம்!
உடலில் உள்ள பெரும்பாலான சோடியம் சத்து, இரத்த நாளங்களிலும் செல்களைச் சுற்றியுள்ள திரவங்களிலும் காணப்படுகிறது. சோடியம் இந்த திரவங்களின் சமநிலையை பராமரிக்கிறது.
உடலில் உள்ள பெரும்பாலான சோடியம் சத்து, இரத்த நாளங்களிலும் செல்களைச் சுற்றியுள்ள திரவங்களிலும் காணப்படுகிறது. சோடியம் இந்த திரவங்களின் சமநிலையை பராமரிக்கிறது. நியூரான்கள் மற்றும் தசைகளின் செயல்பாட்டிற்கு சோடியம் முக்கியமானது. இது உடலின் திரவ சமநிலையையும் ஒழுங்குபடுத்துகிறது. அதோடு, மனக் குழப்பம், மனச்சோர்வு மற்றும் எரிச்சலை உண்டாக்குகிறது. சோடியம் சத்து சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. எனவே, சோடியம் அளவு குறையாமல் இருக்கும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
உடலுக்கு சோடியம் சத்தை கொடுக்கும் உணவுகள்:
பாலாடைக்கட்டி என்னும் பன்னீர்
சுமார் 100 கிராம் பாலாடைக்கட்டியில் சுமார் 300 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது மேலும், பாலாடைக்கட்டி கால்சியத்தின் வளமான மூலமாகும். இது தினசரி தேவையில் 12% ஆகும். இந்த பன்னீரில் உள்ள உப்பு உணவின் சுவையையும் மேம்படுத்துகிறது. எனினும், பாலாடைக்கட்டியை அளவோடு உட்கொள்வது நல்லது.
மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம்
உப்பு
நம் வீடுகளில் தினமும் பயன்படுத்தப்படும் வெள்ளை உப்பை சாதாரண உப்பு என்றும் சொல்வார்கள். இதில் சோடியம் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் உப்பில் 38,758 மி.கி சோடியம் உள்ளது. இருப்பினும், அதை அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அளவிற்கு மிஞ்சினால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
கடல் உணவுகள்
கடல் உணவு இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனை முழுமையாக சமைக்கும்போது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும், உங்கள் கடல் உணவை கவனமாக தேர்ந்தெடுப்பது முக்கியம், ஏனெனில் பதப்படுத்tதப்பட்ட டுனா போன்ற மீன் உணவுகளில் அதிக உப்பு உள்ளது. பதப்படுத்தப்பட்ட டுனா மற்றும் இறால்களில், ஒருவர் சாப்பிடும் அளவில், சுமார் 400 மில்லிகிராம் சோடியம் உள்ளது. பிரெஷ்ஷான டுனா, சால்மன் ஆகியவை சிறந்த கடல் உணவுகளில் ஒன்றாகும்.
இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் சோடியம் அதிகமாக உள்ளது, 100 கிராம் கோழி மற்றும் வான்கோழியில் 50 மி.கி சோடியம் உள்ளது. ஆனால் சிவப்பு இறைச்சியில் அதிகம் உள்ளது. உங்கள் உடலுக்குத் தேவையான அளவு சோடியத்தை மட்டும் உட்கொள்ளுங்கள்.
காய்கறி சாறு
நீங்கள் இயற்கையாகவே உடலில் சோடியம் தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பினால், காய்கறி சாறு மிகவும் சிறந்தது. பிரெஷ்ஷான காய்கறி சாறுகளை மட்டும் அருந்தவும், சந்தையில் கிடைக்கும் பேக்கேஜ் செய்யப்பட்ட சாறுகளை முடிந்தவரை தவிர்க்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Alert: காலி வயிற்றில் சாப்பிடக் கூடாத சில உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ