பிசைந்து வைத்த சாப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது சரியா?
நம்மில் பலருக்கு நேரத்தை மிச்சப்படுத்த சப்பாத்தி மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.
நம்மில் பலருக்கு நேரத்தை மிச்சப்படுத்த சப்பாத்தி மாவை பிசைந்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அல்லது, சப்பாத்தி செய்த பிறகு மீதம் இருக்கும் மாவை பிரிட்ஜில் வைத்து சேமித்து அடுத்த நாள் அல்லது அதற்கு அடுத்த நாள் பயன்படுத்துவார்கள். இதை செய்யவே கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே, நேரத்தை மிச்சப்படுத்தவும், வசதிக்காகவும் பிரிட்ஜில் சப்பாத்தி மாவை பிசைந்து வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். பிரிட்ஜில் சேமித்து வைக்கப்பட்ட பிசைந்து வைத்த ரொட்டி மாவில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுவதால் பல வகையான உடல் நல பாதிப்புகள் உண்டாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்ற்னர்.
வயிற்றில் பிரச்சனை அதிகரிக்கும்
சாப்பத்தி மாவை பிசைந்த பிறகு, அதில் நொதித்தல் செயல்முறை தொடங்குகிறது, இதன் காரணமாக மாவில் பாக்டீரியா வளரத் தொடங்குகிறது. ஃப்ரிட்ஜில் வைத்து ரொட்டி செய்யும் போது, உடல் நலத்தை பாதிக்கும் பேக்டீரியா உருவாகி வயிற்றைக் கெடுக்கும். எனவே ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் மாவை பயன்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க | Cancer: புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!
நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும்
கொரோனா காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நல்ல உணவை உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவாக மக்கள் தேடித் தேடி உண்கின்றனர். ஆனால் நீங்கள் பிரிட்ஜில் வைத்த பழைய மாவு சாப்பிட்டு அனைத்தையும் கெடுக்கு வகையில் தவறு செய்கிறீர்கள். ஏனெனில் இதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழந்து பலவீனம் ஆகும்.
மலச்சிக்கல் பிரச்சனை அதிகரிக்கும்
இது தவிர, பிசைந்து பிரிட்ஜில் வைக்கப்பட்ட மாவில் ரொட்டி சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படும். மாவை பிசைந்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் பயன்படுத்தவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR