பித்தப்பை கற்கள் இருந்தால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்குமா? ஷாக்கிங் ஹெல்த் அலர்ட்!!
Health Alert: பித்தப்பை கல் என்பது ஒரு பெரிய பிரச்சனையாகும். இதில் நோயாளிகள் அடிவயிற்றில் கடுமையான வலியை அனுபவிக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பலருக்கு பித்தப்பைக் கற்கள் பிரச்சனை இருக்கின்றது. இதற்கு பல காரணங்களும் உள்ளன. இன்றைய அவசர உலகில் புற்றுநோயும் பலரிடம் காணப்படுகின்றது. இரண்டும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளாக உருவெடுத்து வருகின்றன. இவை இரண்டுக்கும் இடையில் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற குழப்பம் பலருக்கு உள்ளது. ஆனால் இவற்றுக்கு இடையில் நேரடி தொடர்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
பிர்லா மருத்துவமனை குருகிராம் மினிமல் அக்சஸ் மற்றும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை இயக்குனர் டாக்டர் மயங்க் மதன் இது குறித்து சில முக்கிய தகவல்களை அளித்துள்ளார். உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால், மக்களுக்கு கற்கள் பிரச்சனை ஏற்படலாம் என அவர் கூறுகிறார். பித்தப்பை கல் என்பது ஒரு பெரிய பிரச்சனையாகும். இதில் நோயாளிகள் அடிவயிற்றில் கடுமையான வலியை அனுபவிக்கிறார்கள்.
உடலில் ஏற்படும் கற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
- பித்தப்பையில் காணப்படும் முதல் வகை கல்லை 'பித்தப்பை கல்' என்று கூறுகிறோம்.
- இரண்டாவது வகை கல் சிறுநீரகத்தில் காணப்படுகின்றன.
சிறுநீரக கற்கள் (Kidney Stones) சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன. ஆனால் பித்தப்பையில் கற்கள் (Gall bladder Stones) இருந்தால், பித்தப்பையை அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். பித்தப்பையில் கொலஸ்ட்ரால் சேர்ந்தால், அது படிக வடிவில் கல்லாக மாறி, 'பித்தப்பை கல்' என்று அழைக்கப்படுகிறது.
சில சமயங்களில் பித்தப்பை (Gall bladder) கற்கள் உள்ள நோயாளிகளுக்கு புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கலாம். அதற்கான சில காரணிகளை இங்கே காணலாம்:
1. உயர் இரத்த அழுத்தம்
பித்தப்பைக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்கும். இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் உடலில் புற்றுநோய் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இரத்த அழுத்தத்தை ஊக்குவிக்கிறது. ஆகையால் பித்தப்பைக் கற்கள் உள்ள நோயாளிகள் அவ்வப்போது மருத்துவரை தொடர்பு கொண்டு உயர் இரத்த அழுத்த பரிசோதனை செய்துகொண்டால் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்.
2. புகைபிடித்தல்
புகைபிடித்தல் (Smoking) மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் பித்தப்பை மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. இவை இரண்டும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களாகும். இது கற்களின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆகையால், உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.
மேலும் படிக்க | Yoga For Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் சூப்பர் யோகாசனங்கள்!
3. உணவுமுறை
ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதாலும் சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பதாலும், பித்தப்பைக் கற்களின் அபாயத்தை அதிகரிக்கிறது, இது இறுதியில் புற்றுநோயின் (Cancer) அபாயத்தையும் அதிகரிக்கும். அதிக கொழுப்புள்ள உணவுகள், குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் ஆகியவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.
4. நோய்கள்
அதிக குடிப்பழக்கம், எச்.ஐ.வி/எய்ட்ஸ் போன்ற சில நோய்கள் (Diseases) மற்றும் இன்னும் சில பரவக்கூடிய நோய்கள் பித்தப்பைக் கற்கள் மற்றும் புற்றுநோய் ஆகிய இரண்டின் அபாயத்தையும் அதிகரிக்கும். இந்த நோய்கள் உடலின் திறனையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கின்றன. ஆகையால், இப்படிப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவற்றுக்கான முறையான சிகிச்சையை பெறுவதும், அவ்வப்போது உடல் பரிசோதனை செய்துகொள்வது மிக அவசியமாகும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Health Tips: முள்ளங்கியை எப்படியெல்லாம் சாப்பிட்டா டாக்டருக்கு செலவு செய்ய வேண்டாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ