பரோட்டா என்பது அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடித்தமான உணவு என்றால் மிகையில்லை. அதிலும் இளைஞர்கள், குழந்தைகளுக்கு பரோட்டா குருமா இருந்தால் போதும். பரோட்டா என்னும் மைதா மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டி வகை வாய்க்கு மிகவும் சுவையானதாக இருந்தாலும், அவர் உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 மைதா மாவில்,  பரோட்டா தவிர பூரி, சமோசா ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது. அது தவிர பீட்ஸா, பர்கர், மோமோஸ், சில வகை பிஸ்கட் போன்றவற்றை தயாரிக்கவும் மைதா பயன்படுத்தப்படுகிறது. மிக சுவையான உணவுகளான இவற்றை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு கேடு.


மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?


உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங்  இது குறித்து கூறுகையில், மைதா கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும், அதனை தயாரிக்கும் செயல்முறை வேறுபட்டது. கோதுமை மாவு தயாரிக்கும் போது, ​​கோதுமையின் மேல் உள்ள தவிடு அகற்றப்படுவதில்லை.  இவை நம் உடலுக்கு மிக முக்கியமான  நார்சத்தை அளிக்கிறது. ஆனால், மைதா மாவு தயாரிக்கும் போது  நார்ச்சத்து முழுமையாக அகற்றப்படும். 


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மைதா


டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், நார்ச்சத்து இல்லாத நிலையில், சாப்பிட உடன் அது குடலில் ஒட்ட ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சினையும் ஏற்படக்கூடும். மேலும் இது அஜீரணத்திற்கும் காரணமாக இருக்கலாம்.


எலும்புகள் பலவீனமாகும்


மைதா மாவிலிருந்து தயாரிக்க்கும் போது, மாவின் அனைத்து புரதங்களும், நார் சத்துக்களும் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக இது அமிலமாக செயல்படுகிறது.  இது எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறுஞ்சி இழுப்பதனால், இது எலும்புகளை பலவீனப்படுத்துகிறது.


மைதாவை உட்கொள்வதால் ஏற்படும்  பிற பாதிப்புகள் 


மைதாவில் அதிக அளவு மாவு சத்து உள்ளது, இதன் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கும் மற்றும் படிப்படியாக இரத்தத்தில் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்டின் அளவும் அதிகரிக்கத் தொடங்குகிறது. அதனால், நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், மைதாவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.


அதிக அளவில் மைதா மாவு கேடு விளைவிக்கும்


மைதா மாவு அதிக அளவில் சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கிறது. இதன் காரணமாக குளுக்கோஸ் இரத்தத்தில் சேரத் தொடங்குகிறது. இது உடலில் ரசாயன எதிர்வினைகளை உருவாக்குகிறது. இதன் காரணமாக கீல்வாதம் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து உருவாகிறது.


ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்