செரிமானம் முதல் சருமம் வரை: காலையில் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Benefits of Beetroot Juice: தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நமக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் கூறியுள்ளார்.
Benefits of Beetroot Juice: நாம் நமது அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன. இவற்றில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நம் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன. அப்படிப்பட்ட காய்களில் பீட்ரூட்டும் ஒன்று. இதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகள் கிடைக்கின்றன. பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நமது உடலில் ஏற்படும் ஆக்கப்பூர்வமான விளைவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பீட்ரூட் நிலத்தடியில் வளர்க்கப்படும் மிகவும் சத்தான ஒரு வேர் காயாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன. இவை நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பீட்ரூட்டின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. ஏனெனில், நோய்களை நெருங்க அனுமதிக்காத பீட்டாலைன்களும் இதில் அதிகம் உள்ளன. தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நமக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் கூறியுள்ளார். அதை பற்றி இங்கே காணலாம்.
பீட்ரூட் சாறு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பருவநிலை மாறும்போது சளி, இருமல் மற்றும் காய்ச்சலின் அபாயம் அதிகரிக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் உதனால் உடனடியாக பாதிக்கப்படுகிறார்கள். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருந்தால் மட்டுமே, இதுபோன்ற வைரஸ் நோய்களைத் தவிர்க்க முடியும். காலையில் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) அபரிமிதமாக அதிகரிக்கிறது. பீட்ரூட்டில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், தொற்று அபாயம் வெகுவாக குறைகின்றது.
மேலும் படிக்க | ரெட் அலெர்ட்... நெய் சாப்பிடுகிறீர்களா? கொஞ்சம் இதை தெரிஞ்சுக்கோங்க
செரிமானம் மேம்படும்
அடிக்கடி வாயு, அஜீரணம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை எதிகொள்ளும் நபர்கள் பீட்ரூட் சாறு குடிக்கலாம். இவர்களுக்கு பீட்ரூட் சாறு ஒரு மருந்தாக வேலை செய்யும். செரிமானம் (Digestion) நன்றாக இருந்தால் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கு பெரிய அளவில் உதவி கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் இது பெருங்குடல் புற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
இரத்த அழுத்தம் குறையும்
உயர் இரத்த அழுத்தத்தால் (Blood Pressure) பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள், காலை உணவில் பீட்ரூட் சாற்றை சேர்த்துக்கொள்ளலாம். இதில் நைட்ரிக் ஆக்சைடு அதிகமாக உள்ளது. இதன் மூலம், இரத்த நாளங்கள் விரிவடையும். இதனால் அதிகரிக்கும் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதய நோய்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆகையால், பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதோடு மாரடைப்பு அபாயமும் வெகுவாக குறையும்.
சரும பாதுகாப்பிற்கு ஏற்றது
நம்மில் பலர் தோல் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பீட்ரூட் சாறு ஒரு தீர்வாக இருக்கும். பீட்ரூட்டில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்தை (Skin Care) மேம்படுத்த உதவுகின்றன.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இதயத்தை காதலிப்பவரா? இருதயத்திற்கு தேவையான இந்த வைட்டமின்கள் ஆயுளை நீட்டிக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ