அடடே! வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? டிப்ஸை இங்கு பார்க்கலாம்.
சுவையான இயற்கை பானங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது, இளநீர். இதில் இருக்கும் மருத்துவ நன்மைகள், உடலில் இருக்கும் பல நோய்களை தீர்க்க உதவும். இளநீர், வெயில் காலத்தில் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் கிடைக்கும் இயற்கை பானமாகும். இது, உடலுக்கு தேவையான மினரல் சத்துக்களையும் ஆற்றல்களையும் அளிக்கும். இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
செரிமான கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும்:
இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், செரிமான கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கலாம். இளநீரில் உள்ள பன்புகள், உடலில் அமில ரிஃப்ளக்ஸ் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால், வயிற்றுப்போக்கு, அஜீரண கோளாறு அகியவை ஏற்படாமல் தவிர்க்கலாம். இளநீரில் அயர்ன் சத்துகள், கால்சியம் மற்றும் மாக்னீசிய சத்துகள் நிரம்பியிருக்கின்றன. இது, உடலில் உள்ள பி.ஹெச் அளவையும் அதிகரிக்க உதவும்.
தூக்க கலக்கத்தை தீர்க்கும்:
மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தலைவலிக்கும்-தூக்க கலக்கமாக இருக்கும். இதனை தவிர்க்க, காலையில் இளநீர் குடிக்கலாம். இதனால் தூக்க கலக்கம் நீங்கும்.
சிறுநீரக கற்களை நீக்கும்:
வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். உடலில் உருவாகும் ஒரு சில அமில சுரப்பிகள் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாகும். சிறுநீர் மூலம் உருவாகும் ஒரு சில கெமிக்கல் மூலமாகவும் இந்த கற்கள் உருவகலாம். சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றாலோ, உடலில் நீர்ச்சத்து இல்லை என்றாலோ சிறுநீரக கற்கள் உருவாகும். இதை தவிர்க்க, காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாம்.
மேலும் படிக்க | எகிறும் யூரிக் அமில அளவை அசால்டாய் குறைக்கும் பழங்களின் தோல்கள்
முகப்பருக்களை நீக்கும்:
முகப்பருக்களை நீக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். முகப்பருக்கள் உருவாகும் பாக்டீரியாக்களையும் அழற்சி எதிர்ப்புகளையும் இளநீர் அளிக்கிறது.
ஹெல்தியான இதயம்:
கடந்த சில ஆண்டுகளாக இதய நோய்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இதை தவிர்க்க ஹெல்தியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அப்படி ஹெல்தியான பழக்க வழக்கங்களுள் ஒன்று, காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது. இளநீரில் இருக்கும் சத்துகள், உடலில் உள்ள கொழுப்பையும் குறைக்க உதவும்.
யார் யார் இளநீரை குடிக்க கூடாது?
இளநீரில் எலக்ட்ரோலைட்ஸ், பொட்டாசியம் மற்றும் மாக்னீசியம் சத்துகள் நிறைந்திருந்தாலும், இதனை சிலர் குடிக்க கூடாது என கூறுகின்றனர். சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் இருப்பவர்கள், இளநீரை குடிக்க வேண்டும். இது, ரத்தத்தில் பொட்டாசிய சத்துகளை அதிகரிக்க உதவும். ஏற்கனவே ரத்தத்தில் அதிக அளவில் பொட்டாசிய சத்துகள் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்கவும். ஆஸ்துமா பிரச்சனை, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | மைக்ரேன் தலைவலியில் இருந்து விடுதலை வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ