சிங்கம் போல பலம் பெற..வெறும் பாலுடன் ‘இதை’ சேர்த்து சாப்பிடுங்க!
பாலுடன் சில உணவு பொருட்களை கலந்து சாப்பிடும் போது உடலுக்கு பலம் கிடைக்கும். அப்படி சாப்பிடக்கூடியவை என்னென்ன தெரியுமா?
பல ஆண்டு காலமாக, இந்தியாவின் அத்தியாவசிய உணவுகளுள் இடம் பெற்றிருக்கும் ஒன்று, பால். டீ, காபியை தாண்டி பாலில் இருந்து வெண்ணெய், நெய், தயிர் போன்ற பல உணவு பொருட்களை செய்யலாம். உடலுக்கு சத்து கொடுக்கும் இந்த பாலில், இன்னும் கொஞ்சம் இயற்கை மூலிகைகளை கலந்து சாப்பிட்டால் உடலுக்கு அத்தியாவசிய சத்துகள் கிடைக்கும் என்பது மருத்துவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அப்படி பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடியவை என்னென்ன தெரியுமா?
மஞ்சள்:
மஞ்சள் கலந்த பாலை, பலர் தங்க பால் என்று கூறுவர். காரணம், இதற்குள் தங்கம் போன்ற பல அறிய பொக்கிஷமான உடல் நல நன்மைகள் நிறைந்திருக்கின்றன. இதில் இருக்கும் குர்குமின் சத்து, உடலில் அழற்சியை கட்டுப்படுத்த உதவும். மேலும், இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் சத்துகள் உடல் நோய் வாய்ப்படாமலும் பார்த்துக்கொள்ளும்.
இஞ்சி:
இஞ்சி, இயற்கை மூலிகைகளுள் ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். இஞ்சியை பாலில் கலந்து சாப்பிடுவதால், குமட்டல் மற்றும் செரிமான கோளாறை சரி செய்யலாம். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மைகள், உடலில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸை அதிகரிக்க உதவும். இது குறித்து நடைப்பெற்ற ஒரு ஆராய்ச்சியில், குமட்டல் மற்றும் செரிமான கோளாரை தவிர்க்க இஞ்சி கலந்த பால் சிறந்த வழி என்று கூறப்பட்டிருக்கிறது.
தேன்:
தேன், இயற்கையான இனிப்புகளுள் ஒன்று. இதில் இருக்கும் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை, உடலில் நோய் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை தங்க விடாமல் செய்கிறது. அது மட்டுமன்றி, பாலில் தேன் கலந்து குடிப்பது தொண்டை எரிச்சல், தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்த உதவும். மேலும், இருமல் மற்றும் சளிக்கும் பயணுள்ளவையாக இருக்கும்.
இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டை, இந்திய சமையற்கட்டில் இருக்கும் அனைத்து இயற்கை மூலிகைகளுள் ஒன்றாகும். இதனை தினமும் சாப்பிடும் உணவுகளில் சேர்த்துக்கொள்வதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதனை பாலில் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் உணர்திறன் அதிகரிப்பதாகவும், இதனால் இலவங்கப்பட்டையை அடிக்கடி பாலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | பால் குடிக்க மாட்டீங்களா? அப்போ உடலில் இந்த பிரச்சனைகள் கட்டாயம் வரும்
குங்குமப்பூ:
புராண காலத்தில் இருந்து இயற்கை மருந்தாக உபயோகப்படுத்த படுகிறது, குங்குமப்பூ. இதில் இருக்கும் சத்துகள் மன அழுத்தம் மற்றும் மன பதற்றத்தை குறைக்க உதவுமாம். மன அழுத்தத்திற்காக பலர் எடுத்துக்க்கொள்ளும் மருந்துகளை விட இது பயணுள்ள வகையில் இருப்பதாக, ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பல்வேறு மருந்துகளிலும் குங்குமப்பூ பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
பாதாம்:
பாதாமில் நல்ல கொழுப்பு, ஃபைபர், புரதம் உள்ளிட்ட சத்துகள் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் வைட்டமின் இ சத்துகளும் இருப்பதால், இது சரும பளபளப்புக்கும் வழிவகுக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு மருத்துவ ஆய்வில், பாலுடன் பாதாம் சேர்த்து சாப்பிடுபவர்களின் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினமும் பால் குடிப்பவரா நீங்கள்? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ