Not Drinking Milk: தொடர்ந்து சில நாட்களில் நாம் பால் குடிக்காமல் இருந்தால் உடலில் பல மாற்றங்கள் திடீரென ஏற்படத் தொடங்கும். அவை என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
பால் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பால் முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த பொருளாகும். எனவே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் பால் கட்டாயம் குடிக்க வேண்டும். ஆனால் சிலருக்கு பால் பிடிக்காது, இவர்கள் பால் குடிப்பவராகவும் இருக்க மாட்டார்கள். எனவே பால் குடிக்காமல் இருந்தால் உடலில் பல நோய்கள் வரும் அபாயம் உள்ளது, இதைப் பற்றிய சில முக்கிய தகவல்களை இந்தக் கட்டுரையில் காண்போம்.
நம் உடலுக்கு பாலில் இருந்து போதுமான அளவு கால்சியம் கிடைக்கிறது, நீங்கள் பால் அல்லது பிற பால் பொருட்களை உட்கொள்வதை நிறுத்தினால், உடலில் போதுமான கால்சியம் பெற முடியாமல் போகும்.
பாலில் கால்சியத்துடன் நல்ல அளவு புரதமும் உள்ளது, இது நமது தசைகளை வலுவாக வைத்திருக்க உதவும். பால் உட்கொள்வதை நிறுத்தினால், தசைகள் பலவீனமடையத் தொடங்கும்.
உடலைப் பாதுகாக்க, வலுவான நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமாகும். இதற்கு பல சிறப்பு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து பால் குடிப்பதன் மூலம் பெறலாம்.
உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், பல இயல்பான செயல்முறைகள் பாதிக்கப்படும். முக்கியமாக பால் குடிப்பதை நிறுத்தினால் தூக்கமின்மை ஏற்படலாம்.
பால் குடிப்பதை நிறுத்தினால், உடலில் பல ஊட்டச்சத்துக்கள் குறையத் தொடங்கும். மேலும் உடல் பலவீனம் அடையத் தொடங்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.