’கோடை ஆப்பிள்’ நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
கோடை ஆப்பிள் நுங்கு சாப்பிடுவதால் தோல் பிரச்சனைகள் முதல் எடை குறைப்பு முயற்சி வரை அனைத்துக்கும் சாதகமான பலன்களை கொடுக்கும். முக்கியமாக கோடையில் ஏற்படும் நீரிழப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
கோடைகால வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளால் உங்களுக்கு இருந்தால், கோடை ஆப்பிளான நுங்கை எடுத்துக் கொள்ளுங்கள். பருவ கால உணவான நுங்கு இப்போது தாராளமாக கிடைக்கும். இது உங்களை உடலை நீரேற்றமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் எடை இழப்பு முயற்ச்சிக்கும் உதவும். நுங்கில் வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. இது ஆரோக்கியத்திற்கு பல அற்புதமான நன்மைகளை வழங்குகிறது.
எடை இழப்பு
நூங்கு சாப்பிடுவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த பழத்தில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து இருப்பதால், இது ஒரு நபரின் வயிற்றை நீண்ட நேரம் நிரப்புகிறது. அதனால் எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதனை அதிகம் சேர்த்துக் கொள்வதற்கு இதுவே காரணம். இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் சரியான வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கிறது.
மேலும் படிக்க | இந்த 7 விஷயங்கள் செய்தால் போதும்..அடி வயிறு தொப்பை ஐஸ் போல் கரையும்
உடல் வெப்பநிலை கட்டுப்பாடு
நுங்கின் குளிர்ச்சித் தன்மையால், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. கோடையில் அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இதன் காரணமாக தோல் எரிச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், நுங்கு உட்கொள்வது இந்த சிக்கலில் இருந்து விடுபட சிறந்த வழியாகும்.
வெள்ளைப்படுதலுக்கு தீர்வு
வெள்ளைப்படுதல் காரணமாக பெண்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், நுங்கு உங்கள் பிரச்சனையையும் தீர்க்கிறது. இந்த பழத்தில் அதிக அளவு பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் இருப்பதால் இந்த பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கிறது.
நீரிழிவு நோய்
நுங்கின் குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
தோல் பிரச்சினைகள்
நுங்கு உங்கள் சருமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் சொறி, உஷ்ண சொறி போன்ற சரும பிரச்சனைகளை தவிர்க்கலாம். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோல் அழற்சி மற்றும் எரிச்சலை குறைக்க உதவும்.
மேலும் படிக்க | அடிக்கடி படுத்தும் வாய்ப்புணுக்கு வெறும் 5 ரூபாய் இருந்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ