உருளைக்கிழங்கு சாறு சருமத்திற்கு மட்டுமல்ல, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும், உருளைக்கிழங்கு சாறு உடலின் பல பிரச்சனைகளை நீக்கும். இதை தொடர்ந்து உட்கொள்வது கீல்வாதத்தை சீர் செய்யும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவும். உருளைக்கிழங்கு சாறு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துக் கொண்டால், அதை தவறாமல் குடிப்பீர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தோலின் நிறத்தை மேம்படுத்தவும், கரும்புள்ளிகளை அகற்றவும் உருளைக்கிழங்கு சாற்றைப் பயன்படுத்துகிறோம், ஆனால் உருளைக்கிழங்கு சாறு, நமது ஆரோக்கியத்திற்கும் நன்மை கொடுக்கும் வகையில், வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தாமிரம், துத்தநாகம் என பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.


மூட்டுவலி, உடல் பருமன், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உருளைக்கிழங்கு சாறு குடிப்பதன் மூலம் சமாளிக்கலாம். அதன் பலன்களை விரிவாக அறிந்து கொள்வோம்-


நோயெதிர்ப்பு அமைப்பு வலுவடைகிறது
உருளைக்கிழங்கு வைட்டமின் சியின் சிறந்த மூலமாகும். உடலில் இருக்கும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் 1 கிளாஸ் உருளைக்கிழங்கு சாறு குடித்து வந்தால், அதன் மூலம் ஏற்படும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, பல வகையான தொற்று நோய்கள் நம்மை அண்டாது.


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? அப்போ இந்த ரொட்டி மாவு உங்களுக்கு விஷம்
 
கீல்வாதத்திலிருந்து நிவாரணம்
உருளைக்கிழங்கு சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, இது உடலில் வீக்கம் மற்றும் நிறம் மாறுதலைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். மூட்டு வலி, வீக்கத்தால் தொந்தரவு இருப்பவர்கள், உருளைக்கிழங்கு சாற்றை தினமும் குடிப்பதன் மூலம், முதுகு, முழங்கால் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம்.


புண்களில் இருந்து நிவாரணம்
உருளைக்கிழங்கு சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதுகாப்பு கிடைக்கும், புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவும். என்பதால், வயிற்றுப் புண்கள் ஏற்படுவதைத் தடுக்க ஆன்டி-பாக்டீரியல் புரோபயாடிக் பானமாக செயல்படும் உருளைக்கிழங்கு ஜூஸ் குடிக்கலாம்.


கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தமாக்கும் ஜூஸ்
தினமும் உருளைக்கிழங்கு சாறு குடித்து வந்தால், கல்லீரல் மற்றும் பித்தப்பை நச்சுத்தன்மை நீங்கும். இது ஹெபடைடிஸ் போன்ற கடுமையான நோய்களை எதிர்த்துப் போராட உதவும். தினமும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் உருளைக்கிழங்கு சாறு குடித்து வர கல்லீரல் மற்றும் பித்தப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 


மேலும் படிக்க | Hemochromatosis: அளவிற்கு அதிகமான இரும்பு சத்து உயிருக்கு எமனாகலாம்; எச்சரிக்கும் நிபுணர்கள்!


கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுப்படுத்தும்
உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, பி-காம்ப்ளக்ஸ் மற்றும் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.


உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க நீங்கள் விரும்பினால், தினமும் 1 கிளாஸ் உருளைக்கிழங்கு சாற்றை உட்கொள்ளுங்கள். இது உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், உருளைக்கிழங்கை வடிக்காமல் அப்படியே ஜூஸாக குடிக்க வேண்டும்.


ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம்
ஒற்றைத் தலைவலி பிரச்சனையை போக்க, தினமும் 1 டம்ளர் உருளைக்கிழங்கு சாறு குடித்து வரவும். இந்த ஜூஸ் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை குறைக்க வல்லது. இது தவிர உருளைக்கிழங்கு சாற்றை நெற்றியில் தடவுவதால், தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.


உருளைக்கிழங்கு சாறு தோலுடன் சேர்ந்து உங்களின் பல பிரச்சனைகளை நீக்கும். இருப்பினும், உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் கடுமையான பிரச்சனை இருந்தால், நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உருளைக்கிழங்கு சாற்றை உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ’குடிமகன்களின் கவனத்திற்கு’ புத்தாண்டு கொண்டாட்ட ஹேங் ஓவரில் இருந்து வெளிவர டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ