நீரிழிவு நோயாளியா நீங்கள்? அப்போ இந்த ரொட்டி மாவு உங்களுக்கு விஷம்

Diabetic Diet Food List : பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், ​​எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் நீரிழிவு நோயாளிகள் கோதுமை மாவு ரொட்டி சாப்பிடலாமா? கூடாதா? என்கிற கேள்விக்கான பதிலை இங்கே பெறுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 30, 2022, 04:45 PM IST
  • சர்க்கரை நோய் இருக்கும் போது உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
  • இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் ஆபத்து நிச்சயம்.
  • கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி நன்மை பயக்குமா?
நீரிழிவு நோயாளியா நீங்கள்? அப்போ இந்த ரொட்டி மாவு உங்களுக்கு விஷம் title=

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுமுறை: இன்றைய உலகில் நீரிழிவு நோய் அதிக மக்களை தன் பிடியில் சிக்கவைத்து வருகிறது. சிறுவயதினர், பெரியவர்கள் என பாரபட்சம் இன்றி அனைவரும் இந்த நோய்க்கு ஆளாகி வருகிறார்கள். இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். நீண்ட காலமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், உடலில் பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் அடைப்பு, மூளைக்கு ஆபத்து, நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, கண்கள் மற்றும் சிறுநீரகங்களில் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

நீரிழிவு நோயாளிகள் சரியான உணவுமுறை பற்றிய முழுமையான அறிவைப் பெற்றிருப்பது அவசியமாகும். அத்தகைய சூழ்நிலையில் நீரிழிவு நோயாளிகள் கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி உடலுக்கு நன்மை பயக்கும் என்று எண்ணுகின்றனர். ஆனால் அது தவறு, இது நீரிழிவு நோயாளிகளுக்கு விஷம் போன்றது. உண்மையில், கோதுமை மாவின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அதிகமாக இருப்பதால், கோதுமை மாவில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கூடுதலாக அதிகரிக்கச் செய்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் எந்த மாவின் ரொட்டிகளை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறதா? இதுக்கெல்லாம் கண்டிப்பா ‘நோ’ சொல்லிடுங்க

சர்க்கரை நோயாளிகள் எந்த மாவு ரொட்டிகளை சாப்பிட வேண்டும்?

சோள மாவு : சர்க்கரை நோயாளிகள் சோள மாவில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்திகளை சாப்பிடுவது நன்மை பயக்கும். சோள மாவு ரொட்டியை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சோளத்தில் நார்ச்சத்து இருக்கிறது, இது தவிர இதில் புரதம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்து இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.

கொண்டைக்கடலை மாவு: கொண்டைக்கடலை மாவில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.

ராகி ரொட்டி: ராகியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தா முள்ளங்கியிடம் இருந்து விலகியே இருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News