கேரள மருத்துவமனையில் இருந்து  நோய் குணமாகி விட்டது என வீட்டிற்கு அனுப்பபட்டவரின் புண்களில் புழுக்கள் நெழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள சுகாதார அமைச்சர் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா மருத்துவ கல்வித் துறை இயக்குநரிடம் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.


திருவனந்தபுரம்: மருத்துவ சிகிச்சையில்  அலட்சியம் காட்டப்பட்ட சம்பவம் அமபலமாகியுள்ளது. கோவிட் -19 தொற்று நோயிலிருந்து குணப்படுத்தப்பட்ட பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவருக்கு, படுக்கை புண்கள் காணப்பட்டது. அதில் புழுக்கள் நெழிந்து கொண்டிருந்தது, அவரது உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரை தொடர்ந்து கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா விசாரணைக்கு உத்தரவிட்டார்.


இந்த விஷயத்தை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஷைலஜா மருத்துவ கல்வித் துறை இயக்குநரிடம் கேட்டார்.


55 வயதான அனில்குமாரின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை சுகாதார அமைச்சரிடம் புகார் அளித்திருந்தனர்.


தினசரி கூலித் தொழிலாளியான அனில்குமார் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


“அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் ஐசியுவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனை அதிகாரிகள் எங்களை குவாரண்டைனில் சொன்னார்கள். ஆனால் தந்தையின் நிலை குறித்து நாங்கள் விசாரித்தபோது, ​​அவர் நன்றாக கவனிக்கப்பட்டு வருவதாக அவர்கள் எங்களுக்கு உறுதியளித்தனர், ”என்று அவரது மகள் அஞ்சனா ஊடகங்களிடம் கூறினார்.


அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவ கல்லூரி அதிகாரிகள் தெரிவித்ததாகவும், அவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்புவதாகவும் அவரது மகன் அபிலாஷ் கூறினார்.


"அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் எங்கள் இல்லத்தில் படுக்க வைத்த போது, நாங்கள் அவர் புண்களில் புழுக்கள் இருப்பதை கண்டோம்," என்று அவர் கூறினார்.


இதுபோன்ற மற்றொரு வழக்கில், வடக்கு கேரளாவில் ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவ வேளையில், மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதன் விளைவாக அவர் வயிற்றில் சுமந்து வந்த இரட்டைக் குழந்தைகளை இழந்தார்.


இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய மாநில அரசு திங்கள்கிழமை உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது.


ALSO READ | Unlock 5.0 : திரையரங்குகள், சுற்றுலா மையங்கள் திறக்கப்படுமா...!!!


மலப்புரம் மாவட்டம் கோண்டோட்டியைச் சேர்ந்த 20 வயது பெண்ணிற்கு சனிக்கிழமை அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மூன்று மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார். COVID-19 நெறிமுறைகளை மேற்கோள் காட்டி மருத்துவமனைகள் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.


இறுதியாக, அவர் சனிக்கிழமை மாலை ஆபத்தான நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஞாயிற்றுக்கிழமை தனது இரட்டைக் குழந்தைகளை இழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ | SPB-க்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் கடிதம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR