Shocking Health Facts: அளவுக்கு மிஞ்சினால் வேம்பும் விஷமே!!
வேப்பிலை கிருமி நாசினிகளாக இருந்து நமக்கு தூய்மையான காற்றைத் தருகின்றன. கிருமிகளை அகற்றுவதைத் தவிர, இவை இன்னும் பல பணிகளை செய்கின்றன.
வேப்பிலை மற்றும் துளசி போன்ற இலைகள் அவற்றின் மருத்துவ நன்மைகளின் காரணமாக மிகவும் பிரபலமாக உள்ள இலைகளாகும். இவை பல வழிகளில் நமக்கு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வேப்பிலையை எடுத்துக்கொண்டால், கிருமி நாசினிகளான இவை நமக்கு தூய்மையான காற்றைத் தருகின்றன.
கிருமிகளை அகற்றுவதைத் தவிர, இவை இன்னும் பல பணிகளை செய்கின்றன. இருப்பினும், அதிகமாகப் பயன்படுத்தினால், வேப்பிலை ஆபத்துகளையும் விளைவிக்கக்கூடும் என்பதை நம்மில் பலர் அறியோம். வேப்ப (Neem) இலைகளால் நமக்கு நன்மைகளே அதிகம் என்றாலும், இவற்றால் தீமைகளும் ஏற்படுகின்றன.
இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும்
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இரத்த சர்க்கரை அளவைக் (Sugar Level) கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிட்டால் இது அதிகரிக்கும். வேப்ப இலை, வேப்பம்பூ ஆகியவற்றை பயன்படுத்தினால், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்று பலர் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனினும், உட்கொள்ளப்படும் அளவில் அதிக கவனம் தேவை. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைத்துவிடும் தன்மை கொண்டது. ஆகையால் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேப்பிலை, வேப்பிலை சாறு அல்லது வேப்பம்பூவை எடுத்துக்கொள்ளும் போது, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிக அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது
தொற்றுநோய்களின் போது, நமது நோயெதிர்ப்பு (Immunity) அமைப்பு உட்பட நமது உடல்நலப் பாதுகாப்பு குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது. உங்கள் உடல்நிலையைப் பொருத்தவரை, வேப்ப இலை அல்லது வேப்பம் சார்ந்த தயாரிப்புகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆனால் சுகாதார அறிக்கையின்படி, அதிக அளவு வேப்பம் பொருட்களை எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்ற செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏனெனில், வேப்பம் பொருட்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகமாக துண்டுவதால், நமது ஆரோக்கியத்தின் சமன்பாடு கெட்டு விடுகிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ALSO READ: Health News: கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய உணவுகள், பானங்கள்
சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்
நம் உடல் வெவ்வேறு உறுப்புகளால் ஆனது. அவை நம்மை உயிருடன் ஆரோக்கியமாக வைத்திருக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஒருவரின் ஒரு அங்கம் சேதமடைந்தாலும், அது அவரது உயிருக்கு ஆபத்தாகலாம். எடுத்துக்காட்டாக, வேப்பம் பொருட்களை அதிகமாக உட்கொண்டால், அது மறைமுகமாக சிறுநீரக (Kidney) பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பின்னால் வலுவான அறிவியல் அடிப்படை எதுவும் இல்லை என்றாலும், வேம்பில் தீவரம் அதிகம் இருப்பதால், வேம்பு சார்ந்த மூலப்பொருள் குறித்து கவனமாக இருக்க சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வயிற்று எரிச்சல் ஏற்படலாம்
உடல்நலம் குறித்து மிகுந்த விழிப்புடன் இருப்பவர்கள், அதிக அளவில் வேப்ப இலை, வேப்பஞ்சாறு ஆகியவற்றை உட்கொள்ளத் தொடங்குகிறார்கள். ஆனால் இவற்றை அதிக அளவில் உட்கொண்டால் அது புளித்த ஏப்பம் அல்லது வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதை நிரூபிக்க தற்போது எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. மாறாக, பல ஆராய்ச்சிகளில், அதைப் புரிந்துகொள்ள அதிக ஆராய்ச்சி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது
எனவே வேப்ப்பிலை, வேப்பம்பூ, வேப்பஞ்சாறு (Juice) ஆகிய வேம்பின் அனைத்து பொருட்களும் சிறிய அளவில் உட்கொண்டால் நமக்கு வரமாக பயனளிக்கின்றன. ஆனால், அளவு மிகுதியானால் இவை நம் உடல்நலனிற்கு சாபமாகிவிடக் கூடும். ஆகவே வேம்பையும் அளவோடு உபயோகித்து பயன் பெறுவோம்.
ALSO READ: உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள் !!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR