குளிர்காலத்தில், காற்றின் தரம் மிகவும் மோசமாகிறது. இது சுவாச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இதயம் மற்றும் நுரையீரல் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசங்களை அணியுங்கள். மேலும், மாசுபாட்டின் விளைவுகளைத் தவிர்க்க, தினமும் காலையில் பிராணயாமம் மற்றும் உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளியே செல்லும்போது நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மெற்கொண்டாலும், வீட்டில் உள்ள காற்று மாசுபாட்டை மக்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.


நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டிலும் காற்று மாசுபடும் (Air Pollution) அபாயம் உள்ளது. இதற்காக, வீட்டின் உள்ளேயும் வெளியேயும் காற்று மாசுபடுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். இந்த உதவிக்குறிப்புகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் வீட்டிலுள்ள காற்று மாசுபாட்டின் அபாயத்தை நீங்கள் குறைக்கலாம்.


சரியான காற்றோட்டம் இருக்க வேண்டும்


வீட்டில் சரியான காற்றோட்டம் (Ventilation) இருக்க வேண்டும். காற்றோட்டம் சரியாக இல்லாவிட்டால், காற்றின் இயக்கம் சரியாக இருப்பதில்லை. குறுகிய மற்றும் தடைபட்ட காற்றோட்டம் இருக்கும் வீட்டில் காற்றின் சுழற்சி இருக்காது. தடைபட்ட காற்றோட்டம் காரணமாக, மாசுபட்ட காற்றில் 60 சதவீதம் வீட்டிலேயே தங்கிவிடுகிறது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. வீட்டிலுள்ள காற்றை சுத்தம் செய்ய காற்று சுத்திகரிப்பு கருவிகளைப் பயன்படுத்துவது நல்லது.


வீட்டினுள் புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்.


ஒரு ஆராய்ச்சியின் படி, வீட்டில் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு புகைபிடிப்பதே (Smoking) முக்கிய காரணம். கூடுதலாக, வீட்டில் மெழுகுவர்த்திகள் அல்லது ரசாயன பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபடும் அபாயம் அதிகரிக்கிறது.


வீட்டில் செடிகளை வளர்க்கவும்


சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதில் மரங்களும் தாவரங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை காற்றை சுத்திகரிக்கின்றன. ஆகையால் வீட்டில் செடிகளை வளர்ப்பது மிக நல்லது. செடிகள் தாவர விஷம் மற்றும் அசுத்தங்களை அழிக்கின்றன. மேலும், மாசுபட்ட காற்றினால் ஏற்படும் கண் எரிச்சலையும் இவை போக்குகின்றன. கூடுதலாக, இது மன அழுத்தத்தையும் குறைக்கிறது. சுவாச நோய்களின் அபாயமும் குறைகிறது.


ALSO READ: Shocking: Corona Virus-ஐ விட ஆபத்தான கொரோனாவின் பின் விளைவுகளைப் பற்றி தெரியுமா


குளிர்காலத்தில் கார்பெட்டுகளை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும்


கார்பெட்டுகள் தூசி மற்றும் துகள்களின் இருப்பிடமாக விளங்குகிறது. கம்பளத்திலிருந்து வரும் தூசி ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் கபம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்காக, குளிர்காலத்தில் கம்பளத்தைப் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்வது நல்லது.


Exhaust Fans-ஐப் பயன்படுத்துங்கள்


சமையலறை மற்றும் குளியல் அறையில், ஈரப்பதமான காற்று காரணமாக பூஞ்சை ஆபத்து அதிகரிக்கிறது. பூஞ்சை மாசின் சிறிய துகள்களை உள்வாங்கி அவற்றை உடலுக்குள் கொண்டு செல்கிறது. இதனால் சளி, இருமல் மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். பூஞ்சையை தவிர்க்க வீட்டின் சமையலறை மற்றும் குளியலறையில் exhaust fan-களை பயன்படுத்தப்பட வேண்டும்.


குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல்களுக்கானவை. எந்தவொரு மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரின் ஆலோசனையாக இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். நோய் அல்லது நோய்த்தொற்றின் அறிகுறிகள் தென்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.


ALSO READ: நம் உணவில் வெல்லம் பெருகினால், உடல் ஆரோக்கியமும் வெள்ளமாய் பெருகும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR