பருப்பு வகைகளை சாப்பிட விரும்பாதவர் யார் இருப்பார்கள்? பருப்பு வகைகளில் ஏராளமான புரதங்கள் உள்ளன. இதை சாப்பிடுவதனால் உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, வளரும் குழந்தைகளுக்கு பருப்பு மிகவும் அத்தியாவசியமானது. உடல் உருப்புகளின் திடமான உருவாக்கத்திலும், அதற்கு தேவையான புரதங்களை உருவாக்குவதிலும் பருப்பு வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.


இருப்பினும், அதிக அளவில் பருப்பு வகைகளை சாப்பிடுவதால் சில குறைபாடுகளும் ஏற்படுகின்றன.


பருப்பால் உடல் நலக் குறைபாடா என நீங்கள் அச்சரியப்படலாம். ஆனால் இது உண்மைதான்!! குறிப்பிட்ட அளவை விட அதிகமாக பருப்பை உட்கொள்வதால் வரும் தீங்குகளைப் பற்றி இங்கே காணலாம்.


அதிகமாக பருப்பு சாப்பிடுவதால் வரும் தீமைகள்


1- நீங்கள் அதிக அளவில் பருப்பு வகைகளை உட்கொண்டால், அது உங்கள் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கிறது. இதனால் உங்கள் சிறுநீரகத்தில் (Kidney) கற்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.


2- பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்ப்பதால், வாயு பிரச்சனையும் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், உணவில் பருப்பின் அளவு அதிகமானால் வயிறு தொடர்பான (Stomach Problems) பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.


3- அதிக பருப்பு வகைகளை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள நச்சுகள் வெளியே வராமல் போய்விடுகின்றன. இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒரு விஷயமாகும்.


ALSO READ: Health News: உங்கள் குழந்தை Super Star ஆக ஜொலிக்க உணவில் சேருங்கள் Omega-3!!


இருப்பினும், பருப்பு வகைகளை சாப்பிடுவதால் பல நன்மைகளும் (Health Benefits) உள்ளன. பயத்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பை கலந்து சாப்பிட்டால், உடல் நலனும் வயிறும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த இரண்டு பருப்பு வகைகளின் கலவையை நீங்கள் எந்த பருவத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.


குறிப்பாக மழைக்காலத்தில், இந்த பருப்புகளின் கலவை வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். மழைக்காலங்களில் நமது செரிமான அமைப்பு மிகவும் பலவீனமாகிறது. எந்த உணவும் விரைவாக ஜீரணிக்கப்படுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், பயத்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பின் கலவை செரிமானத்திற்கு பெரிய அளவில் உதவுகின்றது.


கோடையில் குளிர்ச்சியான பதார்த்தங்களை சாப்பிடுவது நல்லது. அதேபோல் குளிர்காலத்தில் சூடான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால், பருவத்திற்கு ஏற்ப பருப்பு வகைகளையும் நீங்கள் பிரித்து சாப்பிடலாம். பயத்தம் பருப்பு குளிர்ச்சியானதாகவும், மசூர் பருப்பு சூடானதாகவும் கருதப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் மழைக்காலங்களில் இரண்டையும் கலந்து உணவு வகைகளை செய்து உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது.


(இந்த செய்தி ஆராய்ச்சி மற்றும் நம்பிக்கைகளின் கூற்றுக்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. உடலில் ஏற்கனவே ஏதாவது குறைபாடு உள்ளவர்கள் மற்றும் நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவுகளை தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்)


ALSO READ: Health Tip: காலையில் வெறும் வயிற்றில் எள் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR