இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்துவம் கொண்டைக்கடலை, நம் நாட்டில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது இந்த தானியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொண்டைக்கடலையில் போலி அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. எனவே கொண்டைக் கடலையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், மாரடைப்பை ஏற்படுத்தும் ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும். 


கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.


Also Read | Chicken Eating Tips: அதிக சிக்கன் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனை என்ன?


நார்ச்சத்து அதிகம் கொண்ட கொண்டைக்கடலை, சர்க்கரையை வெளியிடும் பண்பை குறைவாகவே கொண்டிருக்கக்கூடியது. எனவே, குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது. இதனால் நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.  


இரும்புச் சத்து அதிகம் கொண்ட இந்த கடலை, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது. அத்துடன், சோடியம், செலெனியம், துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன.  செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் போன்ற பல வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் என்றாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது 


ஒரு கப் வேக வைத்த கொண்டைக்கடலையில் 269 கலோரி சக்தியும் 15 கிராம் புரதச் சத்தும் இருக்கிறது. நமக்குக் ஒரு நாளைக்குத் தேவையான 2000 கலோரியில் 30 சதவீதத்தை தரக்கூடியது சுண்டல் கடலை எனப்படும் கொண்டைக் கடலை.


Also Read | குடும்பக் கட்டுப்பாடு, குழந்தை பிறப்பை திட்டமிடுவதன் அடிப்படை விஷயங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR