Health news: குடும்பக் கட்டுப்பாடு, குழந்தை பிறப்பை திட்டமிடுவதன் அடிப்படை விஷயங்கள்

இந்தியா போன்ற பாரம்பரியமான நாட்டில் குழந்தைப் பிறப்பைப் பற்றி திட்டமிடுதல் என்பது சில தசாப்தங்களாகத் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குழந்தை பெறுவது என்பது ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டது. அது வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதில் முக்கியத்துவம் வாய்ந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 27, 2021, 02:26 PM IST
  • குடும்பக் கட்டுப்பாடு, குழந்தை பிறப்பை திட்டமிடுவது
  • குழந்தை பெறுவது என்பது ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டது
  • ஆரோக்கியக் குறைவான பெண்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு இறந்து விடுகின்றன
Health news: குடும்பக் கட்டுப்பாடு, குழந்தை பிறப்பை திட்டமிடுவதன் அடிப்படை விஷயங்கள் title=

இந்தியா போன்ற பாரம்பரியமான நாட்டில் குழந்தைப் பிறப்பைப் பற்றி திட்டமிடுதல் என்பது சில தசாப்தங்களாகத் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குழந்தை பெறுவது என்பது ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டது. அது வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதில் முக்கியத்துவம் வாய்ந்தது.

குழந்தைப் பிறப்பு, அதிகமான எண்ணிக்கையிலோ, இடைவெளி இல்லாமலோ, மிக இளம் வயதிலோ அல்லது 35 வயதுக்குப் பின்போ நிகழ்ந்தால், அது பெண்களின் உடல் நலனை பாதிக்கிறது. ஆரோக்கியக் குறைவான பெண்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு இறந்து விடுவதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

குடும்பக்கட்டுப்பாடு என்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் அடிப்படை என்பதும் முக்கியமானது. தற்போது வளரும் நாடுகளில் திருமணமான பெரும்பாலான பெண்களுக்கு கருத்தடைக்கான அனைத்து வழிமுறைகளும் சரிவரத் தெரியவில்லை, தெரிந்தாலும் அது கிடைப்பதில்லை என்பது கவலைக்குரியது. குடும்பக்கட்டுபாட்டுச் சேவை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும், அனைவருக்கும் கல்வி கொடுப்பதும் குடும்பக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

Also Read | இஞ்சி இடுப்பழகியாக இயற்கையான வழிமுறைகள் இதோ...
 
18 வயதிற்கு முன்போ அல்லது 35 வயதுக்கு பின்போ கருத்தருக்கும் பெண்ணின் ஆரோக்கியம் மட்டுமல்ல, அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைய்இன் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.  தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை பாதுகாக்க குழந்தைப் பிறப்புகளுக்குமிடையே குறைந்த பட்சம் இரண்டு வருட இடைவெளி இருக்க வேண்டும். 

எல்லா கருத்தடைமுறைகளிலும் ஆணுறை மட்டுமே கருத்தரித்தல் மற்றும் எச்.ஐ.வி / எயிட்ஸ் போன்ற பாலியல் நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாக்கிறது. பிரசவித்த ஆறு மாதம் வரை, குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே ஊட்டுதல், ஒரு தாய் மீண்டும் கருத்தரித்தலை 98% தடுக்கிறது.  

குடும்பக்கட்டுபாடு என்பது ஆண், பெண் இருவரின் பொறுப்பு.  ஒரு பெண் நான்குக் முறைக்கு மேல்   கருவுறுவதோ அல்லது குழந்தையை பிரசவிப்பதோ பெண்ணின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எப்போது குழந்தை பெற்றுக்கொள்வது, எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது போன்ற விஷயங்களை திட்டமிடுவது அவசியம்.

Also Read | Marriages: கொரோனாவால் ஒரு கோடி குழந்தை திருமணம் நடக்கலாம் UNICEF கவலை

படித்தவர்கள் அவர்களே இந்த விஷயத்தை திட்டமிட்டுக் கொள்வார்கள் என்றாலும், அரசின் சுகாதார மையம் இந்தத் தகவல்களை மக்களுக்கு அளிக்கிறது. இளம் வயதில் திருமணம் செய்வதை தவிர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.

குறைவான இடைவெளியில் குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் பெண்ணுக்கு ரத்தேசாகை, ரத்தப்போக்கு உட்பட பல உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்கிறாள். தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு, ஒவ்வொரு குழந்தைப் பிறப்புகளுக்குமிடையே குறைந்த பட்சம் இரண்டு வருட இடைவெளி இருப்பது மிக அவசியம். 

கருத்தரிப்பு மற்றும் பிரசவத்திலிருந்து ஒரு பெண்ணின் உடல்நிலை மீண்டும் இயற்கை நிலையை அடைய சுமார் 2 வருடங்கள் தேவைப்படுகிறது. எனவே குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குழந்தை பிறப்பை திட்டமிடுவது மிகவும் அவசியமானதாகும்.

Also Read | Health News: உங்கள் குழந்தை Super Star ஆக ஜொலிக்க உணவில் சேருங்கள் Omega-3!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News