Bottle Gourd: இதய ஆரோக்கியம் முதல் நீரிழிவு நோய் வரை அருமருந்தாகும் சுரைக்காய்
சுரைக்காய் உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், மாரடைப்பு, நீரிழிவு உட்பட, பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.
சுரைக்காயின் ஆரோக்கிய நன்மைகள்: சுரைக்காய் (Bottle gourd)என்பது பலருக்கு பிடிக்காத ஒரு காய்கறி எனக் கூறலாம். ஆனால், சுரைக்காய் சாப்பிடுவதால் ஒன்றல்ல, இரண்டல்ல பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். உடல் எடையை குறைப்பதில் இருந்து, ஜீரணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு, வெயில் காலத்தில் சுரைக்காயை உட்கொள்வதன் மூலம், ஆரோக்கியத்தை பேணி காக்கலாம்.
நெஞ்செரிச்சல், உடலில் நீர்ச்சத்து குறைவு, வெப்பத்தால் ஏற்படும் தலைசுற்றல், மூச்சுத் திணறல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்தும் சுரைக்காய் காப்பாற்றுகிறது. சுரைக்காயின் 5 முக்கிய ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
1. உடல் எடை குறையும்
உடல் எடையைக் குறைப்பதிலும் சுரைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சுரைக்காயில் வைட்டமின்-சி, சோடியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையை பெரிதும் குறைக்கலாம்.
2. எலும்புகளுக்கு வலுவூட்டும்
சுரைக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைகின்றன, ஏனெனில் அதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது உங்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது.
மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன
3. மாரடைப்பு அபாயம் குறையும்
சுரைக்காய் சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனை உட்கொள்வதன் மூலம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு சீராகும். அதுமட்டுமின்றி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
4. நரை முடிக்கும் பயனுள்ளதாக இருக்கும்
இது தவிர, இளமையிலேயே ஏற்படும் நரை முடி பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம். கூந்தல் வலுப்பெற தினமும் ஒரு டம்ளர் சுரைக்காய் சாறு குடித்து வந்தால், முடி வளர்ச்சி அதிகரிக்கும். நரை முடி பிரச்சனையும் நீங்கும் என்பது நம்பிக்கை.
மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்
5. மன அழுத்தமும் குறையும்
மாறிவரும் வாழ்க்கை முறையால், நம்மில் பலர் மன அழுத்தத்தில் வாழ்கிறார்கள். இதன் காரணமாக பல நோய்களுக்கு அவர்கள் இலக்காகும் சூழல் உருவாகிறது. சுரைக்காய் சாப்பிடுவது மன அழுத்தத்தையும் குறைக்கிறது என்று உங்களால் நம்ப முடிகிறதா? எனவே இதை கண்டிப்பாக இன்று உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
6. நீரிழிவு நோய்
சுரைக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது 92 சதவிகிதம் நீர் மற்றும் 8 சதவிகிதம் நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை மற்றும் குளுக்கோஸின் அளவு மிகக் மிக குறைவு என்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது.
(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR