Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தால், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 29, 2022, 05:14 PM IST
  • கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது அவசியம்.
  • எச்சரிக்கையாக இல்லையெனில் பெரும் நஷ்டம் ஏற்படும்.
  • இன்று 5 கெட்ட பழக்கங்களை இன்றே விட்டு விடுங்கள்.
Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்  title=

கொலஸ்ட்ரால் இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற பொருள். அதில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் உயர் அடர்த்தி கொழுப்பு புரதம். மற்றொன்று கெட்ட கொழுப்பு என்று அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் ஆகும். 

ஆரோக்கியமான செல்களை உருவாக்க உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் தேவை, ஆனால் சில சமயங்களில் மோசமான உணவுப் பழக்கத்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது, இதனால் மாரடைப்பு உட்பட பல வகையான இதய நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கக் காரணமான சில பழக்கங்களை விரைவில் விட்டுவிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | Raw Ginger: மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கும் ‘பச்சை’ இஞ்சி..!!

கெட்ட பழக்கங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்க காரணமாகும் பழக்கங்கள்:

1. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்

உங்கள் தினசரி உணவில் அதிகப்படியான நிறைவுற்ற அல்லது டிரான்ஸ் கொழுப்பைச் சேர்த்தால், கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக அதிகரிக்கிறது. இந்த வகை கொழுப்பு இறைச்சி கொழுப்பு,  பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்புகளில் காணப்படுகிறது. இதய நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், இன்றே இத்தகைய உணவுப் பழக்கங்களைத் தவிர்க்கவும்.

2. உடல் பருமன்

உங்கள் எடையை குறைப்பது பற்றி கவனம் செலுத்தாமல், இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு வேகமாக அதிகரித்துக் கொண்டே இருந்தால், மிகவும் விழிப்புடன் இருங்கள். உங்கள் உயரத்திற்கு ஏற்ப எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை நிபுணர்களிடம் கண்டறிந்து, அதை பராமரிக்கவும். உடல் பருமன் பல நோய்களுக்கு மூல காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3. உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்

தற்போதைய காலகட்டத்தின் பிஸியான வாழ்க்கை முறையால், மக்கள் உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை, ஆனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது ஒட்டுமொத்த உடற்தகுதியை பராமரிக்கவும் உதவும்.

4. புகைபிடித்தல்

சிகரெட் ரிங் செய்து ஸ்டைலாக அடிப்பதில் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும், இந்த விஷயம் பிற்காலத்தில் தவிர்க்க முடியாத பழக்கமாகி விடுகிறது. இந்த அடிமைத்தனத்தால், உடலில் நல்ல கொலஸ்ட்ரால் குறையத் தொடங்குகிறது.

5. மது அருந்துதல்

குடிப்பழக்கம் எந்த மனிதனையும் அழித்துவிடும். இது கல்லீரலை சேதப்படுத்துவது மட்டுமின்றி, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாகிறது. இந்த கெட்ட பழக்கத்தை எவ்வளவு சீக்கிரம் கைவிட்டு விடுகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது இல்லை. இது கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)

மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்; கட்டுப்படுத்துவது எப்படி!

மேலும் படிக்க | புற்றுநோயின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News