Men's Broken Private Part: யுனைடெட் கிங்டனின் அதிர்ச்சியூட்டும் ஒரு வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு வாலிப பயன் தனது காதலியுடன் உடலுறவு கொள்ளும்போது அவரது ஆண் உறுப்பு உடைந்துவிட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுக்குறித்து தகவல் தி சன் பத்திரிகையில் வெளிவந்தது. உடல் உறவு கொள்ளும்போது ஆண்களின் ஆண்குறி உடைந்துவிடும் ஆபத்து உண்மையில் உள்ளதா? இதைப் பற்றி மருத்துவ அறிவியல் என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? உடல் உறவு கொள்ளும்போது ஆண்குறியில் எலும்பு முறிவு (Penile Fracture) ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவ வல்லுனர்கள்  கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆணுறுப்பு எலும்பு முறிவு என்றால் என்ன?
ஆணுறுப்பு முறிவு சாதாரண எலும்பு முறிவிலிருந்து வேறுபட்டது. ஏனெனில், ஆணுறுப்பு பகுதியில் எலும்பு இல்லை. எனவே, இதை எலும்பு முறிவு எனக்கூறுவதை விட திசு முறிவு என்பதே சரியாகும். உண்மையில், ஆணுறுப்பு தோலின் கீழ் ரப்பர் போன்ற திசுக்கள் அடுக்கு உள்ளது. இது துனிகா அல்புகினியா (Tunica Albuginea) என்று அழைக்கப்படுகிறது. இது உடலுறவுவின் போது ஆணுறுப்பின் அளவை அதிகரிப்பதற்கு குறைப்பதற்கும் காரணமாக இருக்கின்றன. சில நேரங்களில் டூனிகா அல்புகினியாவின் கீழ் இருக்கும் விறைப்பு திசுக்கள் (Corpus Cavernosum) மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் சிறுநீர்க்குழாய் (சிறுநீரைக் கடந்து செல்லும் குழாய்) சிதைவடையும். ஆணுறுப்பு எலும்பு முறிவு (Penile Fracture) வழக்குகள் அரிதானவை என்றாலும், ஒருவேளை உங்களுக்கு அத்தகைய நிலை ஏற்பட்டால், உடனடி மருத்துவ உதவி எடுக்கப்பட வேண்டும்.


ALSO READ | உல்லாசமாய் இருக்கும் போது உயிரிழந்த ஆண்; காரணம் என்னனு தெரியுமா?


ஆணுறுப்பு எலும்பு முறிவு  அறிகுறிகள்: (Penile Fracture Symptoms)
ஆண்களின் ஆணுறுப்பு எலும்பு முறிவு  ஏற்பட்டால், பின்வரும் அறிகுறிகளைக் காணலாம்.
1. ஏதாவது சத்தம் கேட்கும். 
2. ஆணுறுப்பு விறைப்பு குறைவாக இருக்கலாம்
3. காயம் காரணமாக கடுமையான வலி ஏற்படலாம்
4. காயமடைந்த இடத்தில் அடர் நீலம் மற்றும் கருப்பு நிறமாக இருக்கும். 
5. ஆணுறுப்பில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படலாம்
6. கடுமையான வலி அல்லது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படலாம். 


ஆணுறுப்பில் எலும்பு முறிவு எப்படி கண்டறிவது? 
ஆணுறுப்பு பகுதியில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு உள்ளது எனக் கண்டறிய மருத்துவர் சிறப்பு வகை எக்ஸ்ரே, ஆண்குறியில் அல்ட்ராசவுண்ட் அல்லது எம்ஆர்ஐ பரிசோதனையைப் பயன்படுத்தலாம். இது தவிர, சிறுநீர்க்குழாய் செயல்படுவதைக் கண்டறிய சில சிறுநீர் பரிசோதனைகளையும் செய்யலாம்.


இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மருத்துவ ஆலோசனைக்கு தெரிவிக்கப்பட்டது இல்லை. இது ஆணுறுப்பு எலும்பு முறிவு குறித்து அறிந்துகொள்ள நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ | உடலுறவின் போது மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்த ஆண்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR