Health Tips: ஒரே வாரத்தில் உடல் எடையை குறைப்பது எப்படி? சில எளிய முறைகள்!!
வீட்டில் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு உடல் எடையை (Body Weight Loss) எளிதாக கட்டுக்குள் கொண்டுவர முடியம்.
Health Tips: அதிக கொழுப்பினாலும் எடையினாலும் உடலில் ரத்த அழுத்தம், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. வேகமாக நடக்கவும் முடியாது. வீட்டில் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு உடல் எடையை (Body Weight Loss) எளிதாக கட்டுக்குள் கொண்டுவர முடியம். அதைப்பற்றி பார்போம்.
உடல் எடையை (Body Weight) குறிக்க சில எளிய தகவல்கள்:
தினமும் காலையில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.
உருளைக்கிழங்கு அரிசிமாவு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், அதற்கு பதிலாக கோதுமை மற்றும் கோதுமைமாவு பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் காலையில் தக்காளி மற்றும் கருவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
அதிக கலோரி அடங்கிய வெண்ணெய், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் இனிப்பு போன்ற பொருட்களை உட்கொள்வதை குறைத்துக்கொள்ளவும்.
வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலம் அதிகம் இருக்கும் பழத்தை சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
குறிப்பாக உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடிக்கவும். நீங்கள் குடிக்கும் குடிநீர் எடை இழப்புக்கு உதவும் என்று பெரும்பாலும் கூறப்படுகிறது.
தானியங்களுடன் சேர்ந்து காலை உணவை முட்டையுடன் உண்பதால் அடுத்த 36 மணிநேரங்களுக்கு குறைவான கலோரிகளை சாப்பிட உதவுவதோடு அதிக எடை மற்றும் உடல் கொழுப்பையும் இழக்க உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன
உங்களுக்கு பசி எடுக்கும் போது ஆரோக்கியமற்ற உணவை உண்பதை விட ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால், இதனால் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்
READ MORE - தினமும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
READ MORE - முகத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள வீட்டில் Fruit-Facial செய்வது எப்படி?
செய்தி மற்றும் நேரடி செய்தி புதுப்பிப்புகளுக்கு, பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் எங்களைப் பின்தொடரவும். Zeehindustantami.in இணையதளம் விரிவான மற்றும் சமீபத்திய செய்திகளைப் படியுங்கள்